Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மாணவர்களைக் கைத்தொலைபேசி பயன்படுத்தாமல் இருக்க ஊக்குவிக்கும் செயலி

'இளையர்கள் கைத்தொலைபேசியும் கையுமாகவே இருக்கிறார்கள்' என்று பலர் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.

வாசிப்புநேரம் -

'இளையர்கள் கைத்தொலைபேசியும் கையுமாகவே இருக்கிறார்கள்' என்று பலர் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். அதற்குத் தீர்வு கைத்தொலைபேசியேதான் என்கிறது இங்கிலாந்துக் கண்டுபிடிப்பு ஒன்று.

Hold என்பது செயலியின் பெயர்.

கைத்தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கும் மாணவர்களுக்குச் செயலி பரிசுகள் அளிக்கும்.

கோப்பன்ஹேகன் (Copenhagen) வர்த்தகப் பள்ளியில் சந்தித்துக்கொண்ட 3 மாணவர்கள் செயலியை உருவாக்கியுள்ளனர்.

நார்வே, டென்மார்க், ஸ்வீடன் எனப் பல பகுதிகளில் பிரபலமாகவுள்ள செயலியை 120,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகிறார்கள்.

கைத்தொலைபேசி அருகிலிருக்கும்போது ஒருவரின் செயலாற்றல் வெகுவாகக் குறைகிறது என்று டெக்சஸ் பல்கலைக்கழக ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

பள்ளியில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தாத மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் 6.4% அதிகரிப்பது மற்றோர் ஆய்வில் கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தின் 170 பல்கலைக்கழகங்களில் செயலி அறிமுகப்படுத்தப்படும்.

Android, iOS கருவிகள் இரண்டிலும் செயலி கிடைக்கும்.

காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கைத்தொலைபேசி பயன்படுத்தாத ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 10 புள்ளிகளை மாணவர்கள் பெறுவர்.  அவற்றைக் கொண்டு செயலியின் 'சந்தையில்' வெவ்வேறு பொருட்களையும் சேவைகளையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்