Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பெண்களின் மாதவிடாய் நிற்கும் வயதைப் பாதிக்கும் உணவுமுறை

மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுமுறையைப் பின்பற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயது குறையக்கூடும். 

வாசிப்புநேரம் -

மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுமுறையைப் பின்பற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயது குறையக்கூடும்.

பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி தீட்டப்பட்ட அரிசி போன்ற பதனிடப்பட்ட மாவுச்சத்து உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு ஒன்றரை ஆண்டு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடுகிறது.

அதே சமயம் மீன்கள், பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது ஒன்றரை ஆண்டு தள்ளிப்போகிறது.

பருப்பு வகைகளிலுள்ள Antioxidants எனப்படும் வேதிப்பொருட்களும் மீன்களிலுள்ள ஒமேகா 3 கொழுப்புச் சத்துகளும் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

மாறாக, பதனிடப்பட்ட மாவுச்சத்துப் பொருட்கள் உடலின் சுரப்பிகளைப் பாதிக்கின்றன.

இதனால் பெண்களுக்குக் குறுகிய காலத்தில் அதிகமான முறை மாதவிடாய் ஏற்பட்டு சீக்கிரமே முடிந்துவிடுவாக ஆய்வு கூறுகிறது.

மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புத் தேய்மானத்தாலும் இதய நோயாலும் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்