Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குங்குமப் பொட்டு வைக்கப் போறீங்களா...? ஒரு நிமிடம்

அமெரிக்காவில் விற்கப்படும் குங்குமத்தில் ஈயம் கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குங்குமத்தின் சிவப்பு நிறத்தைக் கூட்ட அதில் lead tetroxide எனப்படும் ஈயம் கலக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
குங்குமப் பொட்டு வைக்கப் போறீங்களா...? ஒரு நிமிடம்

(படம்: Reuters)

அமெரிக்காவில் விற்கப்படும் குங்குமத்தில் ஈயம் கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குங்குமத்தின் சிவப்பு நிறத்தைக் கூட்ட அதில் lead tetroxide எனப்படும் ஈயம் கலக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

118 குங்குமப் பொட்டலங்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 95 அமெரிக்காவில் உள்ள தெற்காசியக் கடைகளில் இருந்து வாங்கப்பட்டவை. எஞ்சிய 23 பொட்டலங்கள் புதுடில்லி, மும்பை ஆகிய நகரங்களிலிருந்து தருவிக்கப்பட்டவை. ஆய்வுக்குப் பிறகு 80 விழுக்காட்டு மாதிரிப் பொட்டலங்களில் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு நிர்ணயித்துள்ளதைக் காட்டிலும் அளவுக்கதிமாக ஈயம் கலக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இரத்தத்தில் ஈயம் கலப்பதால் அறிவுத்திறன் பாதிக்கப்படுகிறது. 6 வயதுக்குக் குறைவான பிள்ளைகளின் புத்தி சாதுர்யத்துக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

20 மைக்ரோகிராமுக்கு அதிகமான ஈயம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். சோதனை செய்யப்பட்ட பெருபாலான குங்குமப் பொட்டலங்களில் 10,000 மைகிரோகிராம் ஈயம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

2007இல் ஒரு வகை குங்குமத்தில் ஈயம் கலந்திருப்பது தெரியவந்தபோது அது கடைகளிலிருந்து மீட்கப்பட்டது. சிலவகைக் கண் மையிலும் ஈயம் கலந்திருந்ததால் அமெரிக்காவில் அப்போது அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்