Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எதிர்வரும் சீனப் புத்தாண்டினால் பிரபலம் அடைந்துவரும் ஹஸ்கி வகை நாய்கள்

ரஷ்யாவின் க்ராஸ்னோயர்ஸ்க் (Krasnoyarsk) விலங்குத் தோட்டத்தில் உள்ள ஹஸ்கி வகை நாய்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

வாசிப்புநேரம் -

ரஷ்யாவின் க்ராஸ்னோயர்ஸ்க் (Krasnoyarsk) விலங்குத் தோட்டத்தில் உள்ள ஹஸ்கி வகை நாய்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

எதிர்வரும் சீனப் புத்தாண்டு, நாய் ஆண்டு என்பது அதற்கு ஒரு முக்கியக் காரணம்.

க்ராஸ்னோயர்ஸ்க் நகரின் குளிர்கால விடுமுறை நாட்களில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹஸ்கி நாய்களே உற்ற விளையாட்டுத் தோழர்கள்

சிறுவர்களின் பனிச் சறுக்கு வண்டிகளை இழுத்துச் செல்வது, இந்த நாலுகால் நண்பர்கள்தான்.

ஹஸ்கி நாய்கள் மிகவும் புத்திசாலிகள்.
அவற்றைப் பராமரிப்பவர்களுக்கு அவற்றின் இயல்பு புரிந்திருப்பது அவசியம்.

பனிச் சறுக்கு வண்டிகளை இழுத்துக்கொண்டு ஓடுவது இந்த நாய்களுக்குப் பொழுதுபோக்கல்ல.
ஒரு முக்கியமான வேலை.

ஆகவே, அதற்கு ஏற்ற பராமரிப்பு அவசியம்.


சீனப் பஞ்சாங்கப்படி, நாய் ஆண்டில் நாய்கள் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரும் என்பது நம்பிக்கை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்