Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தாண்டுத் தீர்மானங்களை நிறைவேற்ற சில எளிய வழிகள்

ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும், இந்த ஆண்டு முடிவதற்குள் குறிப்பிட்ட ஓர் இலக்கையாவது அடைய வேண்டும் என நம்மில் பலர் கடப்பாடு கொண்டிருப்போம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சிலரின் மனவுறுதி குறைந்துபோகலாம்.

வாசிப்புநேரம் -

ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும், இந்த ஆண்டு முடிவதற்குள் குறிப்பிட்ட ஓர் இலக்கையாவது அடைய வேண்டும் என நம்மில் பலர் கடப்பாடு கொண்டிருப்போம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சிலரின் மனவுறுதி குறைந்துபோகலாம். தீர்மானத்தில் ஒரு பிடிப்பு இல்லாமல் போகலாம்.
இத்தகைய சாக்குப்போக்குகளைத் தள்ளிவைத்து தீர்மானங்களை நிறைவேற்ற சில எளிய வழிகள் உண்டு என வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.

அவற்றுள் சில :

உறுதியாக தெளிவான தீர்மானங்களை வகுத்தல்

நேப்பாளத்தில் லந்தாங் மலைப்பகுதி. (படம்: Wikicommons)

முதலில் எந்தெந்த மாற்றங்களை நம்மைச் சுற்றிக் கொண்டுவரப் போகிறோம் என்பதில் தெளிவு அவசியம். குறிப்பிட்ட தீர்மானங்களைத் தெளிவாக வகுப்பது அதற்கான திட்டத்தை அமைப்பதற்குக் கைகொடுக்கும். நம்பிக்கையோடு செயல்படவும் அது உறுதுணையாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தை அதற்கு வகுப்பதும் நல்லது.

பிறரை ஈடுபடுத்துதல்

முக்கியமானவருடன் தீர்மானத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற மனவுறுதி அதிகரிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.

பெரும்பாலான வேளைகளில் பிறருடன் சேர்ந்து ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சொல்வோர் அதனை எப்படியாவது நிறைவேற்றுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

நேரத்தை ஒதுக்கி திட்டத்தைச் செயல்படுத்துதல்

உதாரணத்துக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தால் தினந்தோறும் காலையில் அந்த மொழியைக் குறிப்பிட்ட நேரத்துக்குக் கேட்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி தொடர்ந்து எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது பழக்கமாகிவிடும். இலக்குகளை அடைய அவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதும் நன்று. எழும்போதும் தூங்குவதற்கு முன்பும் இலக்குகளை எழுதி படித்துக் கொள்வது அதற்கான வழிகளில் ஒன்று.
தீர்மானங்களை ஓராண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை..

தீர்மானங்களை அடுத்த புதிய ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனப் பலரும் எண்ணம் கொள்வர். அதற்கு அவசியமில்லை. சில இலக்குகளை அடைய கூடுதல் காலமெடுக்கலாம். அவரவரைப் பொறுத்தே கால அவகாசம் அமையும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். சில வேளைகளில் திட்டங்கள் குறிப்பிட்டபடி நடக்காது என்பதை மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுதல் மாற்றங்கள் ஏற்படும்போது அதற்கேற்ப நடந்துகொள்ள உதவும். சில வேளைகளில் நினைத்த இலக்கை எட்டமுடியாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்ததற்கான மனநிறைவு கிடைப்பதும் நல்லதுதான். அதுவே அடுத்த கட்டத்துக்கான உற்சாகமாக அமையும்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்