Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வெப்பத்தால் ஏற்படும் காயங்களை எப்படித் தடுப்பது?

மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்தாலோ நாடித் துடிப்பு இல்லாமல்போனாலோ உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கவும். விரைவாக அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவும்.

வாசிப்புநேரம் -

ஒருவருக்கு வெப்பத்தால் காயம் ஏற்பட்டிருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என உங்களுக்குத் தெரியுமா?

  • முதலில் பாதிக்கப்பட்டவரை நிழற்பகுதிக்குக் கொண்டுசெல்லவும்.
  • பிறகு உடல் வெப்பத்தைத் தணிக்க ஆடைகளைத் தளர்த்திவிடலாம்.
  • ஈரமான துணியைக் கொண்டு முகத்தைத் துடைக்கவோ, உடலில் தண்ணீரைத் தெளிக்கவோ வேண்டும். அவர் சுயநினைவுடன் இருந்தால், தண்ணீரைப் பருகுவதற்குக் கொடுக்கவும்.
  • மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்தாலோ நாடித் துடிப்பு இல்லாமல்போனாலோ உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கவும். விரைவாக அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவும்.

வெப்பக் காயங்களின் தொடர்பில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சிங்கப்பூர் ஆயுதப் படை கூறியுள்ளது.

உடலை ஒருவர் அதிகமாக வருத்திக் கொள்ளும்போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.

வெகுவாக மாற்றம் ஏற்படும் நிலையில் உடலின் செயல்பாடுகளில் தற்காலிக அல்லது நிரந்தர பாதிப்புகள் ஏற்படலாம்.

அத்தகைய வெப்பத்தினால் மூவகை காயங்கள் ஏற்படக்கூடும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கால்களில் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

சோர்வு, தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும் சாத்தியமும் உண்டு.

உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரித்தால் குழப்பநிலை, முரட்டுத்தனமான போக்கு போன்றவையால் ஒருவர் பாதிக்கப்படலாம் என்றும் ஆயுதப் படையின் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்