Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உன்னால் முடியும்! - பிள்ளைகளைப் படிக்க ஊக்குவிக்கும் பெற்றோருக்குச் சில தகவல்கள்

படிப்பதற்கு ஆர்வமில்லாத பிள்ளைகளைக் கையாள்வது பெற்றோருக்குச் சிரமமாகத் தான் இருக்கும். சொல்வதெழுதுதல், கட்டுரை போன்றவற்றைப் படிப்பதற்கு பிள்ளைகளுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் அனுபவம் பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கும்.

வாசிப்புநேரம் -

படிப்பதற்கு ஆர்வமில்லாத பிள்ளைகளைக் கையாள்வது பெற்றோருக்குச் சிரமமாகத் தான் இருக்கும்.

சொல்வதெழுதுதல், கட்டுரை போன்றவற்றைப் படிப்பதற்கு பிள்ளைகளுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் அனுபவம் பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கும்.

கவனம் செலுத்துவதாகச் சொல்லும் பிள்ளை.

ஆனால் கண்கணிலோ சோர்வு. உடலிலோ ஒருவித சலிப்பு. கேள்விகளுக்கு வரும் பதில்கள் ஒருவிதம்.
செய்வதறியாது தவிக்கும் பெற்றோருக்கு நிபுணர்கள் சிலர் எளிய வழிகள் சிலவற்றைக் கூறியுள்ளனர்.


உங்கள் பிள்ளைகளின் ஆர்வத்தின் அடிப்படையில் மழலையர் கல்வியைத் தேர்ந்தெடுங்கள்.

விளையாட்டுகளின்வழி கற்றலை ஊக்குவிப்பது குழந்தைகளுக்குப் பெரும்பாலான வேளைகளில் பிடிக்கும்.

குழந்தையின் தனித்துவத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு கையாளும் முறையில் மாற்றங்களைச் செய்யலாம்.

மனப்பாடம் செய்வதைச் சோர்வை ஏற்படுத்தக்கூடிய பணியாகப் பிள்ளைகள் கருதலாம். அந்த எண்ணத்தை மாற்ற புதிய கேளிக்கை நிரம்பிய முறையை அவர்களிடம் அறிமுகப்படுத்தலாம். வண்ணப் படங்களையும் அவர்களுக்குப் பிடித்த கேளிச்சித்திரக் கதாபாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.

பிள்ளைகளின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துவைத்திருப்பது முக்கியம்

சில பிள்ளைகளுக்குப் படிக்கும்போது குறுகிய காலத்தில் இடைவேளை தேவை. சில பிள்ளைகளுக்கு அமைதியான சூழல் வேண்டும். அவர்களின் தேவைக்கு ஏற்ப கற்றல் அனுபவத்தை வீட்டில் அமைப்பது மிக முக்கியம்.

சுயமாகக் கற்றல் பயணத்தை மேற்கொள்ள பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.

தன்னம்பிக்கையையும் மனதிடத்தையும் மேம்படுத்த அவர்களுக்கு உறுதுணையாகப் பெற்றோர் இருக்க வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிள்ளைகளுடன் கலந்துரையாடுதல் உதவும்.

நீண்ட கால இலக்குகள் குறித்து வலியுறுத்துவதைக் குறைத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேசுவது அவர்களின் மனவுளைச்சலைக் குறைக்கும்.

உன்னால் முடியும் எனத் தட்டிக்கொடுப்பது பலனளிக்கும்.

பிள்ளைகளின் மனப்போக்கு எப்படி மாறும் என்பதைக் கணிக்க இயலாது. அதற்கேற்ப பெற்றோரும் மனநிலையைத் தயாராக வைத்திருப்பது அவசியம்.
மேம்படும்போது பிள்ளைகளைப் பாராட்டுதல் மிக முக்கியம்.
சரிவுகளைச் சந்திக்கும்போது ஆறுதல் கூறி எப்படி சவாலைச் சந்திக்கலாம் என அவர்களுடன் பேசுவதும் நன்மை பயக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்