Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

pH அளவு என்றால் என்ன?

சுகாதார அறிவியல் ஆணையம், அண்மையில் சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட வகை ஓமத்தண்ணீரின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. அதில் காரத்தன்மை (Alkalinity) அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை நிர்ணயிக்கும் pH அளவு 13க்கும் அதிகமாய் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. (நடுநிலை அளவு - 7).

வாசிப்புநேரம் -
pH அளவு என்றால் என்ன?

படம்: REUTERS/Alexander Demianchuk

சுகாதார அறிவியல் ஆணையம், அண்மையில் சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட வகை ஓமத்தண்ணீரின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.

அதில் காரத்தன்மை (Alkalinity) அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை நிர்ணயிக்கும் pH அளவு 13க்கும் அதிகமாய் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. (நடுநிலை அளவு - 7).

pH அளவு 7க்கும் குறைவாக உள்ள பொருட்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. pH அளவு குறையக் குறைய அமிலத்தின் அளவு அதிகம் என்று பொருள்.

pH அளவு 7க்கு அதிகமாக இருந்தால் அது காரத்தன்மை என்று கொள்ளப்படுகிறது. pH அளவு அதிகரிக்க அதிகரிக்க காரத்தின் அளவு அதிகம் என்று பொருள்.

தண்ணீரின் pH பொதுவாக 7. அது நடுநிலையான அளவு.

பொதுவாக எல்லா உணவுப் பொருட்களிலும் pH இருக்கும். உடலில் அமிலத்தன்மை சுரக்கும் என்பதால், pH அளவு அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.

 

சில பழங்கள்/காய்கறிகளில் உள்ள pH அளவுகள்:

எலுமிச்சம்பழம் - சுமார் 2.5

ஆப்பிள் - சுமார் 3.5

அன்னாசி - சுமார் 3.5

ஆரஞ்சு - சுமார் 4

தக்காளி - சுமார் 4.5

வாழைப்பழம் - சுமார் 5

கீரை - சுமார் 5.5

தர்பூசணி - 5.6

செலரி, காரட் - சுமார் 6

புரோக்கலி -சுமார் 6.5

அவகாடோ - சுமார் 6.5

சோயாபீன் - 7.20

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்