Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கூந்தலில் சிக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள சில வழிகள்

பட்டுப்போல இருக்கும் கூந்தலைத்தான் அனைவரும் விரும்புவர். சிக்குகள் வராமல் இருக்க சில குறிப்புகள்..

வாசிப்புநேரம் -

பட்டுப்போல இருக்கும் கூந்தலைத்தான் அனைவரும் விரும்புவர். சிக்குகள் வராமல் இருக்க சில குறிப்புகள்..

1) தலைமுடியை வாரவும்

பற்களிடையே நல்ல இடைவெளியுள்ள சீப்புகளைப் பயன்படுத்தவும். அவ்வாறு செய்யும் போது சிக்குகளை எளிதாக எடுத்துவிடலாம், தலைமுடியும் உடையாமல் இருக்கும்.

2) கூந்தலை நன்கு உலர்த்தவும்

ஈரமான தலைமுடியை துண்டால் உரசிக் காயவைப்பது, அதை உடையச் செய்யும். அதற்குப் பதிலாகத் தலைமுடியை மெல்லத் துண்டால் தட்டி, ஈரத்தை எடுக்கவும்.

3) உலர்ந்த கூந்தலில் சிகை அலங்காரம் செய்யவும்

கூந்தல் முழுதாகக் காய்ந்த பின் அதை சிகை அலங்கரம் செய்யவும். கூந்தல் ஈரமாக இருக்கும் போது சிக்குகளை எடுப்பதையும் தவிர்க்கவும். அதனால் முடி எளிதில் உடைந்துவிடும்

4) தலைமுடிக்கும் தேவை நீர்ச்சத்து

கூந்தல் வறண்டிருக்கும் போது சிக்குகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதைத் தவிர்க்க, தலைக்கு எண்ணெய் வைப்பதைப் பழக்கமாக வைத்திருக்கவும்.

5) தூங்கும் போது சடை பின்னிக்கொள்ளவும்

தூங்கச் செல்லும் போது கூந்தலைச் சடையில் பின்னிக்கொள்ளவும். தூங்கும் போது தலைமுடி சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க அது உதவும்.

6) தலையணை உறைகளை மாற்றவும்

பருத்தித் தலையணை உறையைப் பயன்படுத்தும் போது கூந்தல் அதில் உரசி சிக்கிக்கொள்ளக்கூடும். அதனைத் தவிர்க்க, பட்டுத் தலையணை உறையைப் பயன்படுத்தவும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்