Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நமது உடல்களில் அடங்கியுள்ள மர்மங்கள்

நமது உடல் இயற்கையின் மிக நுணுக்கமான படைப்புகளில் ஒன்று. அறிவியலும் மருத்துவமும் இதுவரை எவ்வளவு முன்னேறி இருந்தாலும் நமது உடலின் முழு இயல்புகளைக் கண்டறிய முடியவில்லை.

வாசிப்புநேரம் -

நமது உடல் இயற்கையின் மிக நுணுக்கமான படைப்புகளில் ஒன்று. அறிவியலும் மருத்துவமும் இதுவரை எவ்வளவு முன்னேறி இருந்தாலும் நமது உடலின் முழு இயல்புகளைக் கண்டறிய முடியவில்லை.
அந்த மர்மங்களில் சிலவற்றைப் பார்ப்போம்

நமக்கு ஏன் விரல் ரேகைகள் உள்ளன?

ஒவ்வொரு மனிதருக்கும் விரல் ரேகைகள் மாறுபட்டிருக்கும். பல காலமாக விரல் ரேகைகள் பொருட்களைப் பிடிக்கும் போது, பிடிமானம் தர உதவியது என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், விரல் ரேகையால், பொருட்களின் மீது படியும் விரல் தோல் பகுதி குறையத்தான் செய்கிறது என்பது பின்னர் தெரியவந்தது. ஆகவே, பிடிமானத்துக்கு விரல் ரேகைகள் முக்கியமில்லை என்பது உறுதியானது. இதனால் விரல் ரேகைகளின் பயனை ஆராய்ந்துவருகின்றனர் நிபுணர்கள்.

ஏன் ஒரு கையை மட்டும் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்?

பெரும்பாலோர் வலக்கைப் பழக்கம் உடையவர்கள். சிலருக்குமட்டும் இடக்கைப் பழக்கம் இயல்பாக வரும். இரு கைகள் இருந்தும் ஏன் ஒரு கைக்கு மட்டும் வலிமை அதிகம். அதை ஏன் நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்? மனிதர்கள் உலகில் பல்லாயிரம் காலம் வாழ்ந்தும் இருகைகளையும் சமமாகப் பயன்படுத்தும் இயல்பு ஏன் வரவில்லை என்பது ஆய்வாளர்களின் பெரிய கேள்வி.

ஏன் கொட்டாவி விடுகிறோம்?

கருவில் இருக்கும் காலம் முதல் நாம் கொட்டாவி விடுகிறோம்.
அதை ஏன் செய்கிறோம் என்பதற்கு பதில் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. சிலர் மூளையின் வெப்ப அளவைச் சீராக்க நாம் கொட்டாவி விடுகிறோம் என்று நம்புகிறார்கள். தூக்கமின்மை, சோம்பல் ஆகிய காரணங்களினால் மூளையின் வெப்ப அளவு குறைகிறது. அதனால் கொட்டாவி, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

நாம் ஏன் கனவுகள் காண்கிறோம்?

நமது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கைத் தூக்கத்தில் செலவிடுகிறோம். ஆனால் தூங்கும்போது ஏன் கனவுகள் வருகின்றன என்பது இதுவரை தெரியவில்லை. நாம் தூங்கும்போது அன்றைய தினம் நடந்தவற்றில் எது முக்கியமானது எது முக்கியமற்றது என்பதை வகைப்படுத்த நாம் கனவுகள் காண்பதாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். வேறு சிலர் கனவுகள் நமது உடல் செயல்பாட்டில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று நம்புகிறார்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்