Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எலிசபெத் அரசியாரின் மாடுகள் படுக்க தண்ணீர் மெத்தைகள்

பிரிட்டனின் எலிசபெத் அரசியாருக்கு விலங்குகள் என்றால் கொள்ளைப் பிரியம். நாய்க்குட்டிகள், குதிரைகள், அன்னங்கள் என அவருக்குப் பல விலங்குகள் உண்டு. சுமார் 165 மாடுகளும் உண்டு.

வாசிப்புநேரம் -

பிரிட்டனின் எலிசபெத் அரசியாருக்கு விலங்குகள் என்றால் கொள்ளைப் பிரியம். நாய்க்குட்டிகள், குதிரைகள், அன்னங்கள் என அவருக்குப் பல விலங்குகள் உண்டு. சுமார் 165 மாடுகளும் உண்டு.

பசுக்களை வளர்ப்பது அரசக் குடும்பத்திற்கு புதிதல்ல. 1871இல் முன்னாள் அரசியார் விக்டோரியாவிற்கு முதன்முறையாய் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டன மாடுகள். அவற்றின் சந்ததிகள் சில, தற்போது எலிசபெத் அரசிக்குச் சொந்தமானவை.

அரசக் குடும்பத்தின் மாடுகளுக்கும் சொகுசு வாழ்க்கை தான். பசுக்கள் தினமும் திறந்தவெளியில் மேய்ந்து திரியும். விரும்பும் வேளையில் கொட்டகையில் உள்ள இயந்திரத்தின் உதவியுடன் பால் கறக்கும்.

பொழுதுக்கும் மேய்ந்து களைப்புற்றால் தூங்குவதற்கும் அவற்றுக்குச் சிறப்பு மெத்தைகள் உண்டு. பஞ்சுக்குப் பதிலாகத் தண்ணீர் நிரப்பப்பட்ட மெத்தையில் அவை படுக்கும் போது தசைகளில் உள்ள அசதியைக் குறைக்க முடியுமாம். மாடுகளுக்குத் தண்ணீரில் மிதக்கும் உணர்வு கிடைக்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்