Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முத்திரை பதித்த பெண்களைப் பிரதிபலிக்கும் பார்பி பொம்மைகள்

அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பொம்மைகள் இளம் பெண்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கும் என நம்பப்படுகிறது.

வாசிப்புநேரம் -
முத்திரை பதித்த பெண்களைப் பிரதிபலிக்கும் பார்பி பொம்மைகள்

(படம்:AFP / Laura BONILLA CAL)

சிறுமிகள் அதிகம் விரும்பி விளையாடும் 'பார்பி' பொம்மைகளை உற்பத்தி செய்யும் Mattel நிறுவனம், இந்த வாரம் மேலும் பல புதிய 'பார்பி' பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பொம்மைகள் இளம் பெண்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அறிவியல், எழுத்து, விளையாட்டு போன்ற துறைகளில் முத்திரை பதித்த பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் இந்த பொம்மைகள் வெளியிடப்பட்டன.

இவ்வாறு, பிரபல மெக்சிக்கோ ஓவியர் ஃப்ரீடா காலோ, பெண் விமானி அமீலியா இயர்ஹார்ட் முதலானோர் பொம்மைகளாக வடிவம் பெற்றுள்ளனர்.

ஊக்கமளிக்கும் பெண்கள், நாயகிகள் என்ற இரு பிரிவுகளில் பொம்மைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பொம்மைகள் கடைகளில் கூடிய விரைவில் விற்பனைக்கு வரும். ஆனால், இப்போது அவற்றுக்கு பார்பி இணையத் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்