Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மிளகாயைத் தோற்கடிக்கும் கயான் மிளகு

பார்ப்பதற்கு மிளகாய்ப் பொடி போல் இருக்கும். ஆனால் மிளகாய்ப் பொடியைவிட பலமடங்கு காரம் கொண்டது.

வாசிப்புநேரம் -

இது கயான் மிளகு.

பார்ப்பதற்கு மிளகாய்ப் பொடி போல் இருக்கும். ஆனால் மிளகாய்ப் பொடியைவிட பலமடங்கு காரம் கொண்டது.

உடல் எடை குறைக்கப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு அலுத்துப்போனவர்களுக்கு கயான் மிளகு கை கொடுக்கலாம்.

மத்திய, தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது கயான் மிளகு. வைட்டமின் C, வைட்டமின் B6, வைட்டமின் E, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அந்த மிளகில் உள்ளன.

வயிற்றுக்கும் இதயத்திற்கும் கயான் மிளகு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். அதனைச் சாப்பிடுவோருக்குப் விரைவில் பசி எடுக்காது எனக் கூறப்படுகிறது.

இனிப்பு, எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றுக்கான ஆசையையும் மிளகு குறைக்குமாம்.

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது கயான் மிளகு. என்றாலும், மிளகு சாப்பிடுவது குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவரிடம் விடை கேட்டுக் கொள்வது நல்லது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்