Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

QR குறியீடு - தெரிந்துகொள்ள வேண்டியவை

மின்னிலக்கத் துறையில் சிங்கப்பூரின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. QR குறியீடுகள் அதற்குச் சிறந்த உதாரணம்.

வாசிப்புநேரம் -

மின்னிலக்கத் துறையில் சிங்கப்பூரின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. QR குறியீடுகள் அதற்குச் சிறந்த உதாரணம்.

பேருந்துகள், உணவகங்கள், கடைத்தொகுதிகள், ஏன் கழிவறைச் சுவர்களிலும் QR குறியீடுகளைக் காணலாம்.

திறன்பேசிகளைக் கொண்டு குறியீடுகளை  வருடும்போது,  விலைக்கழிவுகள், பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றை அதனலிருந்து வெளிக்கொணரலாம்.

1.QR என்றால் என்ன?

'Quick Response' என்ற தொடரின் சுருக்கமே QR.

2. QR உருவானது எப்படி?

Denso Wave என்ற ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனம் QR முறையை உருவாக்கியது. கார் பாகங்களைக் கண்காணிக்க QR குறியீடுகள் 1994 இல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டன.

3. QR குறியீட்டில் என்னென்ன சேர்க்கலாம்?

அதிகபட்சம் 2,953 எழுத்துக்கள் &  7,089 எண்கள் ஆகியவற்றைக் QR குறியீட்டில் சேர்க்கலாம்.
'கான்ஜி' எனப்படும் ஜப்பானிய எழுத்துமுறையையும் அதற்குள் சேர்க்கலாம்.

ஒரு பொருளை வாங்கி, விற்கும் நடவடிக்கைகளுக்காகவும், சொந்த விவரங்களை இணையப் படிவங்களில் எளிதில் நிரப்புவதற்காகவும் QR குறியீடு பெரிதும் பயன்படும்.

4. அழகிய வடிவம்

பொருட்களின் விலை வில்லைகளில் (Barcode) இருக்கும் கட்டுப்பாடுகள் QR குறியீட்டுக்கு இல்லை. அதனால், வேண்டிய வண்ணத்தில், விரும்பிய வகையில் QR குறியீடுகளை அமைக்கலாம்.

அவற்றில் சில இங்கே:

QR குறியீட்டின் சிறப்பு அம்சங்கள் காலப்போக்கில் மேலும் பெருகக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்