Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சிக்கு 5 வழிகள்

காலையில் எழ்ந்தால் இவற்றை நீங்கள் செய்வீர்களா?

வாசிப்புநேரம் -
காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சிக்கு 5 வழிகள்

(படம்: Pixabay)

இரவு தூங்கினாலும் மனம், உடல் ஆகியவை இன்னும் சோம்பலாக இருப்பதை உணர்கிறீர்களா?

அதிகாலையில் எழுந்து அன்றைய தினத்தை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் துவங்குவதைப் பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்!

அதிகாலையில் எழுவதோடு மனத்தையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள என்னென்ன ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றலாம்?

குறிப்பாக காலை 10 மணிக்கு முன்னால் என்னென்ன செய்யலாம்? இதோ ஒரு பட்டியல்:

1) தியானம் செய்தல்
நீண்ட நேரத்திற்குத் தியானம் செய்யவேண்டியதில்லை. சுமார் 15 நிமிடங்களே போதும். நித்திரையிலிருந்து அமைதியாக எழுந்து மூச்சுப் பயிற்சிகளை செய்யலாம். இது மூளைக்குக் கூடுதலான பிராணவாயுவை அனுப்பி உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கவல்லது.

2) கைபேசிகள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்
கவனச்சிதறல்கள் இல்லாமல் முக்கியமான காரியங்களை மட்டும் செய்வதற்கு இந்த நேரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

(படம்: Miguel Porlan © 2018 The New York Times) 

காலையில் எழுந்ததும் உடனே கைபேசிகளை நாடாமல் ஆழமாக சிந்தித்தல், யோசனைகள், அன்றைய திட்டங்கள் ஆகியவற்றை எழுதுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

3) குளித்தல்
குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதன் பின்னர் சுத்தமான உடைகளை அணிந்தால் நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

4) காலை உணவைச் சாப்பிடுதல்
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருக்கும்போது உடல் இயங்குவதற்குத் தேவையான சக்தியைக் காலை உணவு அளிக்கிறது. அதைத் தவிர்ப்பதோ மறப்பதோ உடலுக்கு மிகவும் ஆபத்தானது. ஆரோக்கியமான பழங்கள், காய் வகைகளுடன் பதப்படுத்தப்படாத உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.

5) தண்ணீர் அருந்துதல்
தாகம் வந்து அதன் பின்னர் நீர் குடிப்பதற்குப் பதிலாக காலையிலிருந்து தண்ணீர் பருகும் பழக்கத்தைத் தொடங்கலாம். எழுந்தவுடன் 450 மில்லிலிட்டர் அளவு தண்ணீர் அருந்தலாம். நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்