Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனப்பாடம் செய்வதில் உலகளவில் இரு முறை தங்கம் வென்ற பெண்ணின் ரகசியம்

IKEAவின் அடுத்த ஆண்டுக்கான விளம்பரப் புத்தகத்தில் 328 பக்கங்கள். அவற்றுள் மொத்தம் 4,818 பொருட்களின் விவரங்கள். அவை அனைத்தையும் ஒரே வார்த்தில் மனப்பாடம் செய்தார் யாஞ்சா. 

வாசிப்புநேரம் -
மனப்பாடம் செய்வதில் உலகளவில் இரு முறை தங்கம் வென்ற பெண்ணின் ரகசியம்

(படம் : IKEA)

யாஞ்சா விண்டர்சோல் (Yanjaa Wintersoul) தமது பட்டப் படிப்பை வழக்கத்தைவிட சீக்கிரமாக முடிக்கவேண்டும் என்று  நினைத்தார். அந்த முயற்சியில் அவர் கற்றுக்கொண்ட வித்தை, மனப்பாடம் செய்வதில் 23 வயது யாஞ்சாவைக் கில்லாடியாக்கியது.

மனப்பாடம் செய்வது குறித்த புத்தகம் ஒன்றைத் தாம் படித்ததில் அது எவ்வளவு சுலபம் என்று அறிந்ததாகச் சொன்னார் யாஞ்சா. உலகிலேயே ஞாபகச் சக்தியின் தொடர்பில் முதலிடத்தில் இருக்கும் பெண் என்ற பெருமை யாஞ்சாவைச் சேரும்.

மங்கோலியாவில் பிறந்த அவர் ஸ்டாக்ஹோம், கென்யா, தோக்கியோ போன்ற இடங்களில் வளர்ந்தார். பல மொழிகள் கற்றுத் தேர்ந்த யாஞ்சா அண்மையில்  IKEAவின் வழி அனைத்துலக அளவில் பிரபலமானார்.

 


IKEAவின் அடுத்த ஆண்டுக்கான விளம்பரப் புத்தகத்தில் 328 பக்கங்கள்.
அவற்றுள் மொத்தம் 4,818 பொருட்களின் விவரங்கள்.
அவை அனைத்தையும் ஒரே வாரத்தில் மனப்பாடம் செய்தார் யாஞ்சா.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து ஆகிய நாடுகளில் யாஞ்சா IKEAவின் விளம்பரத்துக்கான இயக்கங்களில் ஈடுபட்டுள்ளார்.

தியானம் செய்வதில் அதிக நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார் யாஞ்சா. கவனம் செலுத்துவதற்கு அது உதவும் என்று அவர் விளக்கினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்