Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஃபேஸ்புக் மோசடி- உங்களைப் பாதுகாத்துக்கொள்ள எளிய வழிகள்

ஃபேஸ்புக் மூலம் பொருட்கள் வாங்குவதில், கடந்த சில மாதங்களில் ஏகப்பட்ட மோசடிகள் நடந்திருப்பதாய் சிங்கப்பூர்க் காவல் படை கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஃபேஸ்புக் மோசடி- உங்களைப் பாதுகாத்துக்கொள்ள எளிய வழிகள்

படம்: REUTERS/Dado Ruvic

ஃபேஸ்புக் மூலம் பொருட்கள் வாங்குவதில், கடந்த சில மாதங்களில் ஏகப்பட்ட மோசடிகள் நடந்திருப்பதாய் சிங்கப்பூர்க் காவல் படை கூறியிருக்கிறது.

சென்ற ஆண்டு ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் அத்தகைய 108 சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டது.
அதற்கு முன்னர் ஈராண்டுகள் அத்தகைய எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை.

உங்களுக்கு ஃபேஸ்புக் பக்கம் உள்ளதா? அதைப் பாதுகாக்க என்ன செய்திருக்கிறீர்கள்?

இந்தக் குறிப்புகளும் உங்களுக்கு உதவக்கூடும்.

  • பொதுவாக அனைவரும் உங்கள் தகவல்களைப் பார்க்கும்படி வைத்திருக்கிறீர்களா? எச்சரிக்கை!
  • உங்கள் "Privacy Settings" க்குச் சென்று, தகவல்களை உங்கள் நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி செய்யுங்கள்.
  • பழைய நண்பரிடமிருந்து "நண்பகராகும்படி" (Friend Request) மீண்டும் அழைப்பு வருகிறதா? - எச்சரிக்கை. சரிபார்த்துவிட்டு ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • உங்கள் நண்பர்கள் பட்டியலை வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும்படி வைக்காதீர்கள்.
  • உங்கள் பெயரில் மற்றொருவர் போலியாகப் பக்கம் ஒன்றை உருவாக்கியிருக்கிறாரா? ஃபேஸ்புக்கின் "Reporting Tools" அங்கத்துக்குச் சென்று உடனடியாகப் புகார் அளியுங்கள்.
  • பிரச்சினை எழுந்தவுடன் உங்கள் பக்கத்தை உடனே செயலிழக்கச் செய்துவிடாதீர்கள். அதனால் நிலைமை சரியாக வாய்ப்பில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்