Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சோனியின் புதிய 'இயந்திர' நாய்க்குட்டி

நாய்க்குட்டிகளை விரும்பிக் கண்ணிமை போல் பேணி வளர்ப்பவர் பலர்...

வாசிப்புநேரம் -

நாய்க்குட்டிகளை விரும்பிக் கண்ணிமை போல் பேணி வளர்ப்பவர் பலர்...
செல்ல நாயை இழந்த நவோஹிரோ சுகிமோட்டோ என்னும் ஏழு வயதுச் சிறுவனுக்கு மீண்டும் களிப்பூட்ட வருகிறது 'இயந்திர' நாய்க்குட்டி.

பிரபல மின்னியல் நிறுவனமான சோனி, இயந்திர நாய்க்குட்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

30 செண்டிமீட்டர் நீளமுள்ளது இயந்திர நாய்க்குட்டி.

நகரும் காதுகள், ஒளி உமிழும் கண்கள் ஆகியவற்றின் மூலம் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த அந்நாயால் முடியும்.

நவோஹிரோ சுகிமோட்டோ, 'இயந்திர' நாய்க்குட்டியை முதலில் பெறும் நபர்களில் ஒருவர்.  தனது செல்ல நாய் மாண்ட துயரத்தில் இருந்த சிறுவனுக்குப் புதிய நாய் ஆறுதலாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாய் அருகில் இல்லாதபோது திறன்பேசி வழி அதனுடன் தொடர்புகொள்ளவும் உரிமையாளர்களால் முடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்