Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிரிட்டன்: ஒருமுறை பயன்படுத்தி வீசும் குவளைகளுக்கு "லாட்டே தீர்வை" விதிக்கப்படுமா?

ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குவளைகளின் பயன்பாட்டைக் குறைக்க, பிரிட்டன் புதிய தீர்வையொன்றை விதிப்பதுபற்றிப் பரிசீலித்துவருகிறது.

வாசிப்புநேரம் -

ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குவளைகளின் பயன்பாட்டைக் குறைக்க, பிரிட்டன் புதிய தீர்வையொன்றை விதிப்பதுபற்றிப் பரிசீலித்துவருகிறது.  பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் காப்பிக்கான பிளாஸ்டிக் குவளைகளுக்குத் தீர்வை விதிக்க வேண்டுமெனக் கோரி வருகின்றனர்.

25 பென்ஸ் ( 0.34 டாலர்) தீர்வை விதிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு கேட்டுக்கொண்டுள்ளது. அது நடப்புக்கு வந்தால், ஒருமுறை பயன்படுத்தப்படும் குவளைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பது எதிர்பார்ப்பு.

ஆயினும் அதுகுறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் எந்த உறுதியான திட்டத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.

மறுபயனீடு செய்யக்கூடிய குவளைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, இப்போதே காப்பிக் கடைகள் விலைக்கழிவு கொடுத்துவருவதை அரசாங்கம் சுட்டியது. அதற்காக அந்தக் கடைகளைப் பாராட்டுவதாகவும் அரசாங்கம் கூறியது.

இதேபோன்ற பிளாஸ்டிக் குவளைகளில் உள்ள இனிப்பால் ஈர்க்கப்படும் தேனீக்கள், அவற்றில் இறகுகள் சிக்கி மடிந்து போகின்றன. பழரசக் கோப்பைகள், காப்பி, தேநீர் பானக் குவளைகளில் சிக்கி அன்றாடம் பலகோடி தேனீக்கள் மடிவதை சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேனீக்கள் மடிந்தால், மகரந்தச் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு தானிய விளைச்சல் பாதிக்கப்படுமென்பதை அவர்கள் சுட்டினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்