Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடல்நலக் குறைவுடன் வேலை செய்வது எப்படி?

உடல்நலம் சரியில்லாமல் இருந்தால் வேலையில் இல்லாமல் வீட்டில் தண்ணீர் குடித்து நன்கு ஓய்வெடுப்பதே சாலச் சிறந்தது.

வாசிப்புநேரம் -

உடல்நலம் சரியில்லாமல் இருந்தால் வேலையில் இல்லாமல் வீட்டில் தண்ணீர் குடித்து நன்கு ஓய்வெடுப்பதே சாலச் சிறந்தது. ஆயினும், சில நேரங்களில் நாம் அவசரம் அல்லது வற்புறுத்தலுக்கு ஆளாகி, நோயுடன் வேலைக்கு வரவேண்டியிருக்கும்.

சமாளித்துக்கொள்ள சில எளிய குறிப்புகள் இங்கே:

1. வீட்டில் இருந்தவாறே வேலை செய்யலாம்: வேலையிடத்திற்கு வருவதற்குப் பதிலாக வீட்டிலுள்ள கணினியில் வேலைகளைச் செய்து முடிக்கும் வாய்ப்பைத் தொழில்நுட்பம் தருகிறது. முதலாளிகளின் மனம் அத்தகைய ஏற்பாட்டுக்கு இடம் கொடுத்தால் ஊழியர்கள் சற்று இதமடைவர்.

2. அமைதியாக இருத்தல்: மன உளைச்சல் உடலை மேலும் நலிவடையச் செய்யலாம். எனவே, மூச்சைப் பலமுறை உள்வாங்கி, அமைதியை உணர நீங்கள் முயலலாம்.

3. முன்னேற்பாடுகள்: வேலையிடத்தையும் செய்ய வேண்டியவற்றையும் முறையாக கோத்து வைத்தால், நோயுடன் வேலை செய்ய நேரிடும்போது பதறவேண்டாம். அதனால் உங்கள் பாரமும் குறையலாம்.

4. கவனமாக இலக்குகளை வகுத்துக்கொள்ளவேண்டும்: வேலைகளில் மிக முக்கியமானது எதுவோ அதற்கே நீங்கள் முன்னுரிமையைக் கொடுக்கவேண்டும். எந்த வேலையைத் தள்ளிப்போடலாம் என்பதையும் எந்த வேலையை அவசரமாகச் செய்யவேண்டும் என்பதையும் நீங்கள் ஆராயவேண்டும்.

சுவர் இருந்தால்தான் சித்திரத்தை நீங்கள் வரைய முடியும். உடல்நலமின்றி வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இருக்காது. எனவே, உடல் ஆரோக்கியத்தை என்றென்றும் பாதுகாப்பது அவசியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்