Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதிய 'சா குவே தியாவ்' பர்கர்

மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் நாசி லெமாக் பர்கர் மலேசியாவில் விற்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அந்த பர்கருக்குப் போட்டி கொடுக்கும் பல்வகை புதிய பர்கர்கள் அண்மைக் காலமாக உருவாகியுள்ளன.

வாசிப்புநேரம் -
புதிய 'சா குவே தியாவ்' பர்கர்

மலேசியாவின் அடுத்த மோகம் இந்த பர்கரா? ( படம்: FungryTV)

மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் நாசி லெமாக் பர்கர் மலேசியாவில் விற்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அந்த பர்கருக்குப் போட்டி கொடுக்கும் பல்வகை புதிய பர்கர்கள் அண்மைக் காலமாக உருவாகியுள்ளன.

பிரபல உள்ளூர் உணவுகளைக் கருப்பொருளாகக் கொண்ட நாசி அயாம் ரெண்டாங் பர்கரும் நாசி கெராபு பர்கரும் உருவாக்கப்பட்டன.

இப்போது FungryTV என்ற உணவு இணையத்தளம் வழங்கும் 'சா குவே தியாவ்' பர்கரை மலேசியாவில் இருப்பவர்கள் விரைவில் சுவைத்து மகிழலாம்.

மீன்துண்டு, சிப்பிகள், மிளகாய், வாத்து முட்டை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இந்த பர்கரில் சேர்க்கப்படும் என்று FungryTV தெரிவித்தது.
FungryTV இன் ஃபேஸ்புக் பக்கத்தில் வாடிக்கையளார்கள் போதிய ஆதரவை வெளிப்படுத்தினால், 'சா குவே தியாவ்' பர்கரை அந்நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியிடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்