Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கலப்படம் செய்யப்படும் குங்குமப்பூ - போலிகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

பலர் குங்குமப்பூ போல இருக்கும் குசம்பப்பூவை வாங்கி, ஏமாற்றப்பட்டது உண்டு.

வாசிப்புநேரம் -

குங்குமப்பூ, தெற்காசிய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மருந்துகளிலும் அழகுப் பராமரிப்புப் பொருட்களிலும் அது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகரித்துவரும் தேவை ஒரு பக்கம் இருக்க பல போலிக் குங்குமப்பூ வகைகள் உருவாகி வருகின்றன.

குதிரை ரோமம், சோள நார், நறுக்கப்பட்ட காகிதம் போன்றவையும் குங்குமப்பூ போல நிறம் மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

பலர் குங்குமப்பூ போல இருக்கும் குசம்பப்பூவை வாங்கி, ஏமாற்றப்பட்டது உண்டு.

இந்தப் போலிக் குங்குமப்பூக்களை அடையாளம் காண சில குறிப்புகள்:

- உண்மையான குங்குமப்பூவின் நுனிகளின் ஒரு பக்கம் திரிந்து இருக்கும்

- சிவப்பு நிறத்தில் இருக்கும் குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் தண்ணீர் ஆரஞ்சு-மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

- போலிக் குங்குமப்பூவில் மணம் ஏதுமில்லை, உண்மையான குங்குமப்பூவில் சற்று நறுமணம் இருக்கும்.

- தூய்மையான குங்குமப்பூவைச் சுவைத்துப் பார்த்தால் இனிப்பும் கசப்பும் கலந்த சுவையைத் தரும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்