Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அலுவலகத்தில் தூக்கமா? என்ன செய்யலாம்?

அலுவலகத்தில் தலைக்கு மேல் பணிகள் இருந்தாலும் சில வேளைகளில் தூக்கம் கண் இமைகளை இழுப்பதுபோல் உணர்வு ஏற்படலாம்.

வாசிப்புநேரம் -
அலுவலகத்தில் தூக்கமா? என்ன செய்யலாம்?

அலுவலகம். (படம்: Reuters)

அலுவலகத்தில் தலைக்கு மேல் பணிகள் இருந்தாலும் சில வேளைகளில் தூக்கம் கண் இமைகளை இழுப்பதுபோல் உணர்வு ஏற்படலாம்.

மனச்சோர்வு, சலிப்பூட்டும் பணிகள், போதிய தூக்கமின்மை ஆகியவற்றின் காரணமாக வேலையிலிருக்கம்போதே தூக்கம் வரலாம்.

அலுவலகத்தில் இருக்கும்போது உறக்கம் வந்தால், தூங்காமலிருக்க என்ன செய்யலாம்?

1) அலுவலகத்தை விட்டு வெளியே செல்லலாம். மெதுநடையில் ஈடுபடுவது உடலுக்கு உற்சாகமளிக்கும். சூரிய ஒளியில் நின்றால் மனச்சோர்வு தானாகவே விலக வாய்ப்புண்டு.

2) சுலபமான உடற்பயிற்சியைச் செய்து உற்சாகம் பெறலாம். குதிப்பது, கைகள், கால்களை நீட்டுவது ஆகியவற்றை அலுவலகத்திலேயே செய்யலாம். இவற்றால் இதயத்துடிப்பு அதிகரிப்பதுடன் ரத்தவோட்டமும் சீராகும். உற்சாகம் உடல் முழுவதும் பரவும்.

3) பிடித்த, துடிப்பான இசையைக் கேட்கலாம். அது, உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் புதுத்தெம்பு கொடுக்கும்.  

4) பணியிடத்தை ஒளி வெள்ளத்தில் மிதக்க வைக்கலாம். வெளிச்சமிக்க இடத்தில் பணியாற்றும்போது கண்பார்வை மேம்படும். சுற்றியிருப்பவர்களுக்கு, ஒளி ஆக்கப்பூர்வமான சக்தியை அளிக்கும்.

5) வேலையிடத்தைச் சுற்றி, கண்ணுக்குக் குளிர்ச்சியான செடிகளை வைத்து அலங்கரிக்கலாம். சுற்றியுள்ள மாசுகளை அவை சுத்தப்படுத்தும்போது புத்துணர்வு கிடைக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்