Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பல்வேறு வகை மாடுகள் - சில தகவல்கள்

விலங்குகளில், மாடுகளுக்கு இந்தியப் பண்பாட்டில், தனிச் சிறப்பும் மதிப்பும் வழங்கப்படுகின்றன. காளை மாடுகள்  நிலத்தை உழுது அதனை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துகின்றன. 

வாசிப்புநேரம் -

விலங்குகளில், மாடுகளுக்கு இந்தியப் பண்பாட்டில், தனிச் சிறப்பும் மதிப்பும் வழங்கப்படுகின்றன. காளை மாடுகள் நிலத்தை உழுது அதனை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துகின்றன. பசுமாடுகள் தாயைப் போல் மனிதர்களுக்கும் பாலை வழங்குகின்றன. மாடுகளுக்கென்றே இன்றைய தினமான "மாட்டுப் பொங்கல்" அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

"மாடு" என்பதை நம்மில் பலர் ஒரே வகையாக நினைக்கக்கூடும். உண்மையிலேயே மாடுகளுக்கு இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உலகில் 800க்கும் மேற்பட்ட மாட்டு இனங்கள் உள்ளன.

இரண்டு முக்கிய பிரிவுகளில் மாட்டு இனங்கள் அடங்கும்.

முதலாவது வகை, போஸ் டாரஸ் ( Bos Taurus). ஐரோப்பா, வடகிழக்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றில் அந்த வகை மாடுகளைக் காணலாம்.

இரண்டாவது வகை, போஸ் இன்டிகஸ் (Bos indicus). இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாடுகள் பொதுவாக இந்த வகையைச் சேர்ந்தவை. அந்த இரண்டு வகை மாடுகளின் கலவைகளும், எருமை போன்ற விலங்குகளுடனான கலப்பு இனங்களும் உலகெங்கும் காணப்படுகின்றன.

இந்தியாவில், அங்கீகரிக்கப்பட்ட 27 மாட்டு இனங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள ஐந்து நில வகைகளிலும் குறிப்பிட்ட மாட்டு வகைகள் வாழ்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேன் பகுதியில் விக்னேஷ் மாட்டுப்பண்ணையைச் சேர்ந்த மாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்