Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உங்களுக்குப் பொருத்தமான பால் எது?

மனிதர்கள் குடிப்பதற்கென, பதப்படுத்தப்பட்டு பலவிதமாகச் சுவையூட்டப்பட்ட பால் விற்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

மனிதர்கள் குடிப்பதற்கென, பதப்படுத்தப்பட்டு பலவிதமாகச் சுவையூட்டப்பட்ட பால் விற்கப்படுகிறது.

உங்களுக்கு எந்தப் பால் பொருந்தும் ?

குறைந்த கொழுப்பு உள்ள பால் (Low fat milk): பாலில் நல்ல சுவை இருக்க வேண்டும். ஆனால் அதிகக் கொழுப்பு வேண்டாம்.

இவ்வாறு நினைப்போருக்குக் குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருந்தும்.

கொழுப்பே இல்லாத பால்: இலேசான சுவை, குறைவான கலோரி ஆகியவற்றை விரும்புவோருக்கு இந்தப் பால் பொருந்தும்.

லெக்டோஸ் இல்லாத பால்: செரிமான் பிரச்சினை இருப்போர் லெக்டோஸ் இல்லாத பால் பருகலாம்.

கொழுப்பு நீக்கப்படாத பால் (Whole Milk): இரண்டு வயதுக் குழந்தைக்குக் கொடுக்கலாம்.
A2 புரதம் உள்ள பால்: இவ்வகைப் பால் கைக்குழந்தைகளுக்குப் பொருந்தாது. ஆனால் சாதாரணப் பால் ஒத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கு இந்தப் பால் மாற்றாகக் கொடுக்கப்படுகிறது.

என்றாலும், சரியான பால் எது என்பதைத் தெரிவு செய்ய முறையான மருத்துவ ஆலோசனை கேட்டுக் கொள்வது சிறந்தது.

இரசாயனக் கலப்பற்ற பால் (Organic Milk):இயற்கையான உரத்தைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் புல்லைத் தின்று வளரும் பசுக்களிலிருந்து கறக்கப்படும் பால்.

அவ்வகைப் பசுக்களுக்கு ஊட்டச்சத்து ஹார்மோன்கள் செலுத்தப்படுவதில்லை.

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, இந்தப் பால் பல வகைத் தயாரிப்புகளாக உருப்பெறுகிறது.

பாலைப் பதப்படுத்துதல்:பதப்படுத்துதல் (pasteruization)

தரப்படுத்துதல் (homogenization) ஊட்டச்சத்து சேர்த்தல் (fortification) ஆகிய மூன்று முறைகளில் பால் திரிந்து போகாமல் செய்யப்படுகிறது.

பாச்சர்முறை: பால் சூடாக்கப்படுகிறது. ஆபத்து விளைவிக்கும் நுண்ணுயிரிகள் அழிந்துபோகும்.

தரப்படுத்துதல்: பாலும் பாலின் கொழுப்பும் தனித்தனியே பிரியாமலிருப்பதை உறுதிசெய்ய இந்த முறை உதவுகிறது.

ஊட்டச்சத்து சேர்த்தல்: மேற்கண்ட இரண்டு முறைகளில் இழக்கப்பட்ட ஊட்டச்சத்துகள் மீண்டும் பாலில் சேர்க்கப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்