Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அ(சுத்தமான) 5 பழக்கங்கள்

சுத்தம் சுகம் தரும். சில வேளைகளில் நாம் சுத்தம் என்று எண்ணி கடைப்பிடிக்கும் பழக்கங்கள் நமது உடலுக்கு கெடுதலை விளைவிக்கக்கூடும்

வாசிப்புநேரம் -

சுத்தம் சுகம் தரும். சில வேளைகளில் நாம் சுத்தம் என்று எண்ணி கடைப்பிடிக்கும் பழக்கங்கள் நமது உடலுக்கு கெடுதலை விளைவிக்கக்கூடும். அவற்றுள் சில இதோ:

1) காதுகளைச் சுத்தம் செய்வது

2) கைகளை உலர்த்தும் இயந்திரங்கள்

கழிவறைகளில் இருக்கும் கைகளை உலர்த்தும் இயந்திரங்களில் ஈரமான கைகளை உலர்த்தும் போது கைகளில் எஞ்சியுள்ள கிருமிகளை அகற்றுவதற்குப் பதிலாக அதை எங்கும் பரப்புகின்றன. இதனால் கிருமிகளை சுவாசிக்கிறோம்.


3) வெந்நீரில் அதிக நேரம் குளிப்பது

வெதுவதுப்பான நீரில் குளிப்பது ஒரு தனி சுகம். ஆனால் அதனால் நமது உடலில் உள்ள இயற்கையான எண்ணெய்ப்பதம் அகற்றப்படுகிறது. சருமத்தைப் பாதுகாக்க உதவும் அந்த எண்ணெய் இல்லாததால் சருமம் வறண்டு போகும்.

4) சாப்பிட்டவுடனே பற்களைத் துலக்குவது

சாப்பிட்டவுடனே பற்களைத் துலக்குவது பற்களில் கிருமி பரவுவதைத் தடுக்கும் என்பது நம்பிக்கை. பற்களை உணவுக்குப் பின் உடனடியாக துலக்குவது ஈறுகளின் மீதுள்ள காறையை அகற்றுகிறது. அமிலத் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடும் போது ஈறுகளில் உள்ள பூச்சு இளகுகிறது. அது மீண்டும் சீராக சுமர் 30 நிமிடம் எடுக்கும். அதனால் சற்று நேரத்திற்குப் பிறகு பற்களை துலக்கவும்.

5) கைகளில் தும்முவது

தும்மல் வந்தால் அதை அடக்க முடியாது. மற்றவர்களுக்கு கிருமிகள் பரவாமல் இருக்க நாம் கைகளில் தும்முவதுண்டு. நமது கைகளைக் கழுவாமல் மற்ற பொருட்களைத் தொடுவதும் அதே கிருமிகளைப் பரப்புகிறது. அடுத்த முறை தும்மல் வரும் போது திசுத் தாளைப் பயன்படுத்துங்கள்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்