Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிள்ளைகளின் முதுகுவலியைப் பள்ளிப்பைகள் அதிகரிப்பதில்லை: ஆய்வு

பிள்ளைகள், இளையர்களுக்கு முதுகுவலி வரும் அபாயத்தை பள்ளிப்பைகள் அதிகரிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று உறுதிசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -

பிள்ளைகள், இளையர்களுக்கு முதுகுவலி வரும் அபாயத்தை பள்ளிப்பைகள் அதிகரிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று உறுதிசெய்துள்ளது.

பிள்ளைகள் தூக்கும் பள்ளிப்பைகளின் எடை அவர்களது உடல்எடையில் 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும் என்று இதற்கு முன் பரிந்துரைக்கப்பட்டது. அதை நிரூபிக்கப் போதுமான ஆய்வுகள் இல்லை என்று இப்போது கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

பிள்ளைகளின் முதுகுவலிக்கும் பள்ளிப்பைகளுக்கும் தொடர்புள்ளதா என்று அறிய ஆய்வுக்குழு 69 ஆய்வுகளை மறுபரிசீலனை செய்தது.

சுமார் 72,000 பிள்ளைகளிடையே ஆய்வுகள் நடத்தப்பட்டன.

பள்ளிப்பைகளின் எடை, வடிவம், பிள்ளைகள் அவற்றை எவ்வாறு தூக்குகின்றனர் என்ற அம்சங்கள் முதுகுவலியை ஏற்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சியின் போது தெரியவந்தது.

பிள்ளைகள் முதுகில் சுமைகளை ஏற்றிக்கொள்வது, உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது பலனளிக்கக்கூடியது என்கிறார் ஆய்வின் தலைவர் பார்மா யமாட்டோ.

பிள்ளைகளுக்கு முதுகுவலி ஏற்பட்டால், வலி சரியாகும் வரை பள்ளிப்பைகளின் சுமையைத் தற்காலிகமகாக் குறைக்கலாம். அவர்களது வலி சரியான பின்னர் மீண்டும் அவர்கள் முழுச் சுமைகளைத் தூக்கலாம் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்