Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இது உணவகமா, கேளிக்கைக் கூடமா?

ஃபுளோரிடாவில் 19,000 சதுர அடி பரப்பளவில் மெக்டோனல்ட்ஸ் உணவகம் ஒன்று உள்ளது. அதில் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உணவகத்தின் ரோனல்ட் மெக்டோனல்ட் சிற்பம் உள்ளது. அதன் உயரம் 30 அடி.

வாசிப்புநேரம் -

ஃபுளோரிடாவில் 19,000 சதுர அடி பரப்பளவில் மெக்டோனல்ட்ஸ் உணவகம் ஒன்று உள்ளது. அதில் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உணவகத்தின் ரோனல்ட் மெக்டோனல்ட் சிற்பம் உள்ளது. அதன் உயரம் 30 அடி.

இந்த மெக்டோனட்ஸ் உணவகம் சாதாரணமானது அல்ல. அதன் வாடிக்கையாளர்களுக்குக் காத்திருக்கும் அனுபவமே தனி.

கண்ணைப் பறிக்கும் வகையில் அதிநவீனமான அலங்காரத்துடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் இந்த உணவகத்தில், பர்கர், உருளைக் கிழங்குப் பொரியல் என வழக்கமான உணவு வகைகளை வாங்கலாம்.

அதற்கும் மேலாக ஒரு படி சென்று விறகு அடுப்பில் செய்யப்பட்ட பீட்ஸா, பாஸ்ட்டா, வோஃபல்ஸ் என உயர்தர உணவும் இங்கு பரிமாறப்படுகிறது.

Guys... McPizza. Mc. Pizza. McPizza! #EpicMcDOrl

A post shared by Ro Romero (@rodolforomero) on

உணவு உண்பதோடு மட்டுமின்றி 22 அடி உயர விளையாட்டுத் தளத்தில் ஏறிக் குதித்து விளையாடலாம், "ஆர்கேட்" என்று அழைக்கப்படும் கேளிக்கைத் தளத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கணிணி விளையாட்டுகளை ஒரு கை பார்க்கலாம்.

"Epic McD" என்று அழைக்கப்படும் இந்த உணவகக் கிளையின் அசத்தல் அம்சங்கள் விரைவு உணவுப் பிரியர்களுக்கு உண்மையில் ஒரு விருந்துதான்!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்