Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வலது கை உடைந்தால் இடது கைக்கு உடற்பயிற்சி கொடுங்கள்

வலது கையிலோ காலிலோ காயம் ஏற்பட்டு அதை சில காலம் பயன்படுத்தாமல் இருந்தால், நாளடைவில் அந்த உடற்பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்து சுருங்கிவிடும். 

வாசிப்புநேரம் -
வலது கை உடைந்தால் இடது கைக்கு உடற்பயிற்சி கொடுங்கள்

(படம்: instagram.com/teddysphotos)

நியூயார்க்: வலது கையிலோ காலிலோ காயம் ஏற்பட்டு அதைச் சில காலம் பயன்படுத்தாமல் இருந்தால், நாளடைவில் அந்த உடற்பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்து சுருங்கிவிடும். அதைத் தவிர்க்க, இடது பக்கத்தில் உள்ள அதே தசைப்பகுதிக்கு உடற்பயிற்சி அளிக்கவேண்டும்.

ஒரு பக்கத்தில் மட்டும் செய்யக்கூடிய உடற்பயிற்சி உடலின் மறுபக்கத்தையும் வலுவாக வைத்திருக்க உதவும் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

கனடாவின் Saskatchewan பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 16 மாணவர்களின் இடது கைகளில் மாவுக்கட்டுகள் போடப்பட்டன. பாதி பேர் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்தனர், மற்ற 8 பேர் வலது கைகளில் உடற்பயிற்சி செய்து வந்தனர்.

ஒரு மாதத்தின் இறுதியில், உடற்பயிற்சி செய்யாத மாணவர்களின் இடது கைகளின் தசைகளின் பலம் 20 விழுக்காடு குறைந்தது. தசைகளின் அளவும் 3 விழுக்காடு குறைந்தது.

இடது கையில் கட்டுப் போடப்பட்டிருந்த நிலையில், வலது பக்கத்தில் உடற்பயிற்சி செய்த மாணவர்களுக்குத் தசைகளின் அளவு குறையவில்லை.

இதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை. எனினும், உடற்பயிற்சி செய்யும் போது வெளியாக்கப்படும் இரசாயனம் இரு பக்கத்திலும் தசை வளர்ச்சியைச் சமமாக வைத்திருக்க உதவுகின்றது என நம்பப்படுகிறது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்