Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'ரூபிக் கியூப்' விளையாட்டின் மறுவடிவமா இது?

'ரூபிக் கியூப்' என்ற விளையாட்டுப் பொருள், பல மில்லியன் பேரை மகிழ்வித்ததுடன் சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

நியூயார்க்: 'ரூபிக் கியூப்' என்ற விளையாட்டுப் பொருள், பல மில்லியன் பேரை மகிழ்வித்ததுடன் சிந்திக்கவும் வைத்திருக்கிறது.
1974ஆம் ஆண்டில் கட்டடக் கலைப் பேராசிரியர் எர்னோ ரூபிக் அதை முதன்முதலில் உருவாக்கினார்.

இப்போது "ரூபிக் கியூப்"க்குப் புதிய போட்டி வந்துள்ளது.

'ரூபிக் கியூப்' போன்று மற்றொரு விளையாட்டை Duncan Toys Co தயாரித்ததாகக் கருதி அந்த நிறுவனத்திற்கும், அந்தப் பொருளை விற்கும் Toys "R" Us நிறுவனத்திற்கும் எதிராக Rubik's Brand Ltd வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

தோற்றத்திலும் வடிவிலும் சில வேறுபாடுகளைத் தவிர்த்து, Duncan நிறுவனம் தயாரித்திருந்த 'குவிக் கியூப்' என்ற விளையாட்டுப் பொருள் 'ரூபிக் கியூப்'பின் நகலாக இருப்பதாக Rubik's Brand Ltd கருதுகிறது.

Duncan நிறுவனத்தின் அந்தச் செயல் தனது நற்பெயரைப் பெரிதும் பாதித்ததாக 'ரூபிக் கியூப்' நிறுவனம் கூறுகிறது.

Toys "R" Us என்ற விளையாட்டுப் பொருள் விற்பனைக் கடை,'ரூபிக் கியூப்'பை 15.99 டாலருக்கும் 'குவிக் கியூப்' 4.99 டாலருக்கும் விற்பனை செய்யப்படுவதாக அதன் இணையத்தளம் காட்டுகிறது.

Rubik's நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது Duncan நிறுவனம். Toys "R" Us இதுவரை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எந்தக் கருத்தும் கூறவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்