Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கால்களை இழந்த போதிலும் விளம்பரத் துறையில் காலூன்ற விரும்பும் சிறுமி

விளம்பரத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது 8 வயதுச் சிறுமியான டெய்ஸி-மே டிமேட்ரேயின் கனவு. பிறக்கும்போதே fibular hemimelia என்னும் நோய் சிறுமியைப் பாதித்தது. 

வாசிப்புநேரம் -
கால்களை இழந்த போதிலும் விளம்பரத் துறையில் காலூன்ற விரும்பும் சிறுமி

படம்: Twitter/ daisy_maydemetre_zebedee

விளம்பரத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது 8 வயதுச் சிறுமியான டெய்ஸி-மே டிமேட்ரேயின் கனவு. பிறக்கும்போதே fibular hemimelia என்னும் நோய் சிறுமியைப் பாதித்தது. அதன் காரணமாகச் சிறுமியின் கால்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 18 மாதங்களாக இருக்கும்போது சிறுமி தன் கால்களை இழந்தார்.

கால்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் விளம்பரத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக உழைத்து வருகிறார். உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று தன் தந்தையுடன் பயிற்சி செய்கிறார்.

2017ஆம் ஆண்டில் அந்தச் சிறுமி Zebedee Management அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.  அந்த அமைப்பு உடற்குறையுள்ளோரைப் பிரதிநிதிக்கிறது.

பிப்ரவரியில் லண்டன் ஆடை அலங்கார பவனியில் அந்தச் சிறுமி பங்கேற்று பலரின் பாராட்டையும் பெற்றார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்