Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டிற்குள் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுமா? விவரங்கள் உள்ளே....

காற்றுத் தூய்மைக்கேடு என்றால் முதலில் நினைவுக்கு வருவது தொழிற்சாலைகளின் உயரமான குழாய்களில் இருந்து வெளிவரும் கரும்புகை...

வாசிப்புநேரம் -

காற்றுத் தூய்மைக்கேடு என்றால் முதலில் நினைவுக்கு வருவது தொழிற்சாலைகளின் உயரமான குழாய்களில் இருந்து வெளிவரும் கரும்புகை...

அல்லது போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் நம்மைச் சூழும் புகை...

வீட்டில் காற்று தூய்மைக்கேடு ஏற்படுமா என்பதைக் கனவில் கூட நினைத்திருக்கமாட்டோம்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

நம் வீட்டுச் சுவர்கள், புதிய படுக்கைகள், புதிய தரை-ஆகியவற்றால் கூட காற்றுத் தூய்மைக்கேடு எற்படக்கூடும்.

அதனால் கண் எரிச்சல், ஒவ்வாமை, புற்றுநோய், ஏன் உயிருக்குக் கூட ஆபத்து நேரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

அஞ்ச வேண்டாம்!

அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்தால் கவலை வேண்டாம்.

குறிப்பாகத் தற்போது COVID-19 நோய்ப்பரவல் காரணமாக வீட்டில் தங்கும் சூழல் அதிகரித்துள்ளதால், சுத்தம் செய்யப் போதிய நேரம் இருக்கும்.

சரி. வீட்டில் என்னென்னவற்றைச் சரிபார்க்க வேண்டும்?

பூஞ்சைகள்:

பூஞ்சைகள் நம் வீட்டில் எளிதில் வளரக்கூடியவை. அவை, எல்லா இடங்களிலுமே வளரும்.

ஆனால், அவை காளான்கள் போல் மிதமிஞ்சிப் பெரிதாக வளராமல் கட்டுப்படுத்துவது சுலபம்.

கடினமான சவால் என்பது, பூஞ்சைகள் கட்டுப்பாடின்றி வளர்ந்தால் அவை காற்றில் பரவி ஒவ்வாமையை உண்டாக்கலாம்.

பூஞ்சையால் தும்மல், மூச்சு விடுவதில் சிரமம், கண் எரிச்சல், தடிப்புகள் போன்றவை வரக்கூடும்.

சில நேரங்களில் கடுமையான மூச்சுத் திணறல் கூட ஏற்படலாம்...

வீட்டில் பூஞ்சைகள் அதிகமாக இருந்தால் உடனடியாகச் சுத்தம் செய்வது நல்லது.

இல்லை என்றால், சுத்தம் செய்யும் நிபுணத்துவச் சேவை வழங்கும் நிறுவனங்களை அணுகலாம்.

வீட்டில் பூஞ்சைகள் சேராமல் இருக்க, ஈரப்பதம் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்க வேண்டும்.

உடைந்த குழாய்கள், சன்னல்கள் போன்றவற்றால் ஈரப்பதம் வீட்டில் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

ஈரப்பதமே, பூஞ்சை வளர முக்கியக் காரணம்.

குளியல் அறைகள், துவைக்கும் இடங்கள், சமையல் அறைகள், துணி காயப்போடும் இடங்களில் பூஞ்சைகள் ஏற்படலாம்.

அந்த இடங்களில் ஈரம் சேராமல், உலர்வாக வைத்திருந்தாலே பெரும்பாலான பிரச்சினைகளைத் தவிர்த்து விடலாம்.

மற்ற பொருள்கள் :

வீட்டில் உள்ள மற்ற சில பொருள்கள் மூலமும் காற்றுத் தரம் பாதிக்கப்படலாம்.

மேசை, சுவர், போர்வை, நாற்காலி எனப் பல பொருள்களில் உள்ள ஒருவிதமான ரசாயனப் பொருள்களால் கூட நமக்கு ஒவ்வாமை ஏற்படும்.

அது, உடல் நலத்தையும் பாதிக்கலாம்.

புதிய வீட்டிலோ புதிய சாமான்களிலோ இருந்து மட்டும்தான் ரசாயனப் பொருள் மணம் வருகிறது என்று நினைக்கக்கூடாது.

புதுப்பிப்பு வேலைகளால் கூட ரசாயனப் பொருள்கள் காற்றில் கலந்துவரும்.

அதனால், பொதுவாக வீட்டில் நல்ல காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

அல்லது ரசாயன வாடை வரும் புதிய பொருள்களைச் சில நாள்கள், காற்றோட்டமான பகுதிகளில் வைத்துவிட்டுப் பின்னர் பயன்படுத்தலாம்.

காற்றோட்டம் முக்கியம்:

வீட்டில் அளவுக்கு மிஞ்சிய பொருள்களைப் போட்டு அடைத்துவைத்தால், பழைய காற்று உள்ளேயே சுற்றிவரும்.

புதிய காற்று உள்ளே வர இடமின்றிப்போகும்.

அதனால், நாம் கதவுகளையும் சன்னல்களையும் அவ்வப்போது திறந்துவைக்க வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம் புதிதாகக் காற்று வீட்டிற்குள் வரும், தேவையில்லாத துர்நாற்றமும் இருக்காது.

எப்போதும் குளிரூட்டப்பட்ட அறை என்றாலும்கூட அங்குள்ள சன்னல்களைச் சற்று நேரமாவது திறந்து வைப்பது ஆரோக்கியமான பழக்கம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்