Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சொல்வதைக் கேட்டு நடக்கும்; சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை - சீனாவின் இயந்திர செல்லப்பிராணி

செல்லப்பிராணி வேண்டும்... ஆனால், அதைப் பராமரிக்க நேரமில்லையா?

வாசிப்புநேரம் -

செல்லப்பிராணி வேண்டும்... ஆனால், அதைப் பராமரிக்க நேரமில்லையா?

சீனாவில் உண்மையான நாய் போலவே செயல்படும் இயந்திர நாய் உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ள அந்த இயந்திர நாயால் கேட்கவும் முடியும். பார்க்கவும் முடியும்.

AlphaDog என்று பெயரிடப்பட்டுள்ள அதை நடக்கக்கூட அழைத்துச் செல்லலாம்.

Weilan நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அது,
ஒரு மணிநேரத்தில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டது.

சந்தையிலேயே அவ்வளவு வேகத்தில் செயல்படக்கூடிய இயந்திர நாய் அதுவே.

உற்சாகமான நாய்க்குட்டி போலவும் அதனால் சுற்ற முடியும்.

அதற்கு இரும்புக் கால்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அது உயிருள்ள நாயைவிட அதிகத் திடமாக உள்ளது.

ஓர் இயந்திர நாயின் விலை 2,400 டாலர்.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே 1,800க்கும் அதிகமான AlphaDog நாய்கள் விற்கப்பட்டுள்ளன.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்