Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மன அழுத்தத்தைக் குறைக்கும் அழகிய விலங்குகளின் காணொளிக் காட்சிகள்

சமூக ஊடகங்களால் தீமைகளே அதிகம் என்று கூறப்பட்டாலும் குறைந்தது ஒரு நன்மையாவது உண்டு...

வாசிப்புநேரம் -
மன அழுத்தத்தைக் குறைக்கும் அழகிய விலங்குகளின் காணொளிக் காட்சிகள்

(படம்: Pixabay)

சமூக ஊடகங்களால் தீமைகளே அதிகம் என்று கூறப்பட்டாலும் குறைந்தது ஒரு நன்மையாவது உண்டு...

அழகான, அள்ளிக் கொஞ்சத் தூண்டும் விலங்குகளைக் கொண்ட காணொளிக் காட்சிகளை அவை வழங்குகின்றன !!!

அவற்றைக் காணும்போது மன அழுத்தம் குறையும் என்றும் உடல், மன நலம் மேம்படும் என்றும் பிரிட்டிஷ் ஆய்வொன்று கண்டுபிடித்துள்ளது.

உலகின் ஆக மகிழ்ச்சியான விலங்குகள் என வர்ணிக்கப்படும் ஆஸ்திரேலியாவின் குவொக்கா (Quokka) விலங்குகளின் இயல்பு, இயற்கையான வசிப்பிடத்தில் அவை என்ன செய்கின்றன போன்றவற்றைக் காட்டும் காணொளிகளைப் பார்ப்போருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படலாம்!

லீட்ஸ் பல்கலைக்கழகம் (Leeds University) நடத்திய ஆய்வில் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அத்தகைய விலங்குகள் கொண்ட காணொளிகளைப் பார்த்தவர்களுக்கு சராசரி இதயத் துடிப்பு விகிதம் சற்றே மெதுவடைந்தது.

அதன் காரணமாக ரத்த அழுத்தமும் குறைந்தது. அதன் மூலம் அவர்களது மன அழுத்தம் குறைந்ததென ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் அன்டிரியா அட்லெய் (Andrea Utley) குறிப்பிட்டார்.

அதோடு, ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் சாதாரண நிழற்படங்களைவிட, மனிதர்களுடன் விலங்குகள் பழகும் காணொளிக் காட்சிகளை அதிகமாக விரும்பினர்.

உங்களுக்கு மன அழுத்தமா... ? உடனே இணையத்தில் இருக்கும் எண்ணிலடங்கா விலங்குக் காணொளிக் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்