Images
  • annanthe
    Sun Pictures

தீபாவளிக்குத் திரையீடு காணும் 'அண்ணாத்த'

இந்தியத் திரைப்பட நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் அதிகாரத்துவ விளம்பரக் காணொளி நேற்று (செப்டம்பர் 10) வெளியிடப்பட்டுள்ளது.

Youtube தளத்தில் அது 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


விவேகம், வீரம் ஆகிய படங்களை இயக்கிய சிவா, இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

டி.இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sun Pictures தயாரித்துள்ள அண்ணாத்த படம், வரும் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top