Images
  • ant stealer
    (படம்:YouTube/rkbiker89)

வைரக்கல்லை இழுத்துச் செல்லும் எறும்பு

எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்!

குட்டிக் குட்டி எறும்புகள் உங்கள் வீட்டில் உள்ள இனிப்புப் பதார்த்தங்களை மொய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

எறும்புகளால் அவற்றின் எடையை விட 50 மடங்கு கூடுதல் எடையுள்ள பொருட்களை இழுத்துச் செல்ல முடியும்.

அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது கட்டெறும்பு ஒன்று.

இந்திய வைரக் கடை ஒன்றில் மேசை மேல் இருந்த வைரக் கற்களில் ஒன்றை எறும்பு இழுத்துச் செல்லும் காணொளி இப்போது இணையத்தில் வலம்வருகிறது.

வெள்ளை மேசையில் அதன் அளவைவிட பெரிய வைரக்கல்லை எறும்பு இழுத்துச்செல்கிறது. 

சர்க்கரை என்று நினைத்ததோ என்னவோ!

அந்தக் காட்சி பதிவுசெய்யப்பட்ட பிறகு எறும்பின் நிலை என்னவாயிற்றோ... தெரியவில்லை.
 

Top