Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நோய் எதிர்ப்பு மருந்தும், மதுபானமும்-சேரலாமா கூடாதா?

நோய் எதிர்ப்பு மருந்தும், மதுபானமும்-சேரலாமா கூடாதா?

வாசிப்புநேரம் -

நோய்த்தொற்று ஏற்படும்போது சில சமயங்களில் மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு மருந்துகளைப் (Antibiotics) பரிந்துரைப்பதுண்டு.
அவற்றை உட்கொள்ளும் நாட்களில் மதுபானம் அருந்தலாமா என்று பலர் மருத்துவர்களைக் கேட்பதுண்டு.

சில நோய் எதிர்ப்பு மருந்துகளைப் பொறுத்தவரை பிரச்சினையில்லை; இருப்பினும் தவிர்ப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

பெரும்பாலான நோய் எதிர்ப்பு மருந்துகள், மதுபானத்துடன் கலந்து விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

அப்படியானால், தவிர்க்கவேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே நோய்த்தொற்றால் அழற்சி ஏற்பட்டிருக்கும் வயிற்றை, மதுபானம் மேலும் மோசமாக்கும்.

எதுவாக இருந்தாலும், மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்