Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கிருமித் தொற்றுக்கான மருந்துப் பொருள்களால் மாசடையும் நீர்நிலைகள்

உலகின் பெருங்கடல்களும், ஆறுகளும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்கனவே மாசடைந்துள்ளன. ஆனால், அதைவிடவும் கவலையளிக்கக்கூடிய மாசு பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

உலகின் பெருங்கடல்களும், ஆறுகளும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்கனவே மாசடைந்துள்ளன. ஆனால், அதைவிடவும் கவலையளிக்கக்கூடிய மாசு பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துப் பொருள்கள் குறித்த எச்சரிக்கை அது.

உலகின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஆறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆறுகளில் அந்த மருந்துப் பொருள்கள் அபாய அளவையும் விடக் கூடுதலாகக் கலந்திருப்பது அதில் தெரியவந்தது.

அந்த மருந்துப் பொருள்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் பாதிக்கக்கூடிய கடுமையான பாக்டீரியாத் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுபவை.

72 நாடுகளில் 711 இடங்களில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.

450க்கும் அதிகமான இடங்களில் நோய் எதிர்ப்புசக்தி கொண்ட மருந்துகள் பாதுகாப்பான அளவைக் காட்டிலும் அதிகமாகக் காணப்பட்டன.

ஆக மோசமான இடங்களில் பாதுகாப்பான அளவைக் காட்டிலும் 300 மடங்கு அதிகமாக அவை காணப்பட்டன.

மனிதர்கள், விலங்குகளின் கழிவுகள் மூலம் அவை நீர்நிலைகளைச் சென்றடைந்ததாகக் கூறப்பட்டது.

கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலைகள், மருந்துப்பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் குழாய்களில் ஏற்படும் கசிவுகளும் அதற்குக் காரணம்.

ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அந்நிலை அதிகம் காணப்படுவதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

கிருமிகள் மருந்துகளுக்கு எதிரான தடுப்புசக்தியைப் பெறுவதற்கும் அந்நிலை வழிவகுக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்