Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கொஞ்ச நேர உடற்பயிற்சியும் மகிழ்ச்சி தரும் - புதிய ஆய்வு

சிறிது நேரம் செய்யும் உடற்பயிற்சியும் ஒருவரின் மனநிலையை மாற்றி அவரை களிப்புற வைக்கும் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
கொஞ்ச நேர உடற்பயிற்சியும் மகிழ்ச்சி தரும் - புதிய ஆய்வு

படம்: Pixabay

சிறிது நேரம் செய்யும் உடற்பயிற்சியும் ஒருவரின் மனநிலையை மாற்றி அவரை களிப்புற வைக்கும் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்தது.

உடற்பயிற்சியே செய்யாதவர்களைவிட சிறிது நேரம் உடற்பயிற்சி செவ்வோரின் மனநிலை வேறுபட்டது.

கொஞ்ச நேரமே உடற்பயிற்சி செய்வோரும், மன அழுத்தம், பதற்றம் ஆகியவை ஏற்படாமல் மேலும் உற்சாகமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்தது.

ஏறக்குறைய 500,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

மிச்சிகன் பல்கலைக்கழக (University of Michigan) ஆய்வாளர்கள், The Journal of Happiness Studies என்ற சஞ்சிகையில் ஆய்வு முடிவை வெளியிட்டனர்.

அவர்கள், புதிய ஆய்வை மேற்கொள்ள முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளைப் பரிசீலித்துப் பார்த்தனர்.

அவற்றின் அடிப்படையில், ஒருவர் செய்யும் உடற்பயிற்சி, அவருடைய மகிழ்ச்சியை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்