Images
  • i13
    (படம்: AP Photo/Jae C. Hong)

Apple நிறுவனத்தின் புதிய iPhone 13 - செப்டம்பர் 24ஆம் தேதி சிங்கப்பூரில் அறிமுகம்

Apple நிறுவனம், அடுத்த தலைமுறை iPhone 13-ரகத் திறன்பேசிகளையும் புதிய iPad கருவியையும் அறிமுகம் செய்துள்ளது.

அந்தத் திறன்பேசிகள், வேகமான ஐந்தாம் தலைமுறைக் கட்டமைப்பில் செயல்படும். கேமராக்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.


(படம்: AP Photo/Jae C. Hong)

ஆனால், அவற்றின் விலை உயர்த்தப்படவில்லை. சிங்கப்பூரில், iPhone 13இன் விலை 1,299 வெள்ளியிலிருந்து தொடங்கும்.

iPhone 13 Pro: 1,649 வெள்ளி முதல்


(படம்: AP Photo/Jae C. Hong)

Pro Max: 1,799 வெள்ளி முதல்

iPhone 13 Mini: 1,149 வெள்ளி முதல்

5 நிறங்களில் வெளியிடப்படவுள்ள அவை, செப்டம்பர் 24ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும்.

முன்பதிவுகள் செப்டம்பர் 17ஆம் தேதி, இரவு 8 மணிக்குத் தொடங்கும்.

-Reuters 

Top