Images
  • Apple
    படம்:  REUTERS/Lucas Jackson

இலவச மின்னிலக்கக் காணொளி சேவை வழங்க Apple திட்டம்

புதிய மின்னிலக்கக் காணொளி சேவையை வழங்க Apple நிறுவனம் திட்டமிடுகிறது.

அதன்மூலம் Apple சாதனங்களை வைத்திருப்போர் அந்நிறுவனத்தின் உள்ளடக்கத்தை இலவசமாகப் பெற்றுகொள்ள இயலும் என்று CNBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஒளிவழிகளையும் வாடிக்கையாளர்கள் சந்தா செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். HBO, Starz போன்ற இணையம் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் பதிவுசெய்ய முடியும்.

புதிய மேம்படுத்தப்பட்ட செயலியை அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது Apple நிறுவனம்.


Top