Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக்கவசம் அணிந்தாலும் சிரிப்பை இழக்காத Apple நிறுவனத்தின் புதிய Emoji!

முகக்கவசம் அணிந்தாலும் சிரிப்பை இழக்காத emoji-ஐ வடிவமைத்துள்ளது Apple நிறுவனம்!

வாசிப்புநேரம் -
முகக்கவசம் அணிந்தாலும் சிரிப்பை இழக்காத Apple நிறுவனத்தின் புதிய Emoji!

படம்: Apple

முகக்கவசம் அணிந்தாலும் சிரிப்பை இழக்காத emoji-ஐ வடிவமைத்துள்ளது Apple நிறுவனம்!

முகக்கவசம் அணிந்திருப்பதைப் போன்று சித்திரிக்கப்பட்டுள்ள Emoji சின்னம் பொதுவாக ஒருவர் உடல்நலம் இல்லாதபோது பயன்படுத்தப்படும் ஒன்று....

சின்னம் சற்று கவலையாகவும் சோர்வாகவும் தோற்றமளிக்கும்.

ஆனால் கிருமித்தொற்றுச் சூழலில் அனைவரும் முகக்கவசம் அணிவது வழக்கமான பிறகு ஏன் அதை அவ்வாறு சித்திரிக்கவேண்டும்?... அதற்குக் கொஞ்சம் சிரிப்பைக் கொண்டுவரலாமே என்று Apple நிறுவனம் எண்ணியுள்ளது போல!

நிறுவனம் அதன் புதிய iPhone iOS மென்பொருளில் முகக்கவசம் அணிந்திருக்கும் Emoji சின்னம் சிரிப்பதைப் போன்று வடிவமைத்துள்ளது.

அது முன்பு போல சோர்வாகவும் தோற்றமளிக்காது.

இருப்பினும் Samsung கைத்தொலைபேசிகளில் அந்தச் சின்னம் மார்ச் மாதத்திலேயே அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த emoji சின்னம் முதன்முதலில் 2008-ஆம் ஆண்டில் iOS
மென்பொருளில் சேர்க்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்