Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மிதக்கும் உருண்டை.... கண்ணாடி நீரூற்று.... உலகெங்கும் வித்தியாசமான Apple கடைகள்

Apple நிறுவனம்,சிங்கப்பூரில் அதன் 3ஆவது கடையைத் திறக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.

வாசிப்புநேரம் -
மிதக்கும் உருண்டை.... கண்ணாடி நீரூற்று.... உலகெங்கும் வித்தியாசமான Apple கடைகள்

(படம்: Apple)

நீரில் மிதக்கும் உருண்டை போல அந்தக் கடை வடிவமைக்கப்படும்.

மிதக்கும் கடையைப் போல, Apple கடைகளின் கட்டமைப்பு பலரை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன.

25 நாடுகளில், 500-க்கும் மேற்பட்ட Apple கடைகள் உள்ளன.

இதோ சில வித்தியாசமான Apple கடைகள்....

இத்தாலியில் உள்ள Apple Piazza Liberty கடை

மிலானில் உள்ள ஆகப் பிரபலமான பாதசாரிகளுக்கான சாலையில் கடை அமைந்துள்ளது.

(படம்: Apple)

(படம்: Apple)

கடையின் நுழைவாயிலில், கண்ணாடி நீரூற்று உள்ளது.

வாடிக்கையாளர்கள் கடைக்குள் செல்லும்போது,நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள 26 அடி உயரமான கண்ணாடியின் மேற்பரப்பில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

துபாயில், Dubai Mall கடைத்தொகுதியில் உள்ள Apple கடை

உலகின் ஆக உயரமான கட்டடமான Burj Khalifa-க்குப் பக்கத்திலேயே கடை அமைந்துள்ளது.

நகரின் சூடான வானிலைக்கு ஏற்றவாறு, கடைக்குள் வரும் வெப்பத்தைத் தணிக்க, வெளியே நிறுவப்பட்டுள்ள Solar Wings அம்சம் உதவுகிறது.

(படம்: Apple)

(படம்: Apple)

கடைக்கு வெளியே, 340 Polymer கோல்கள், ஒரு பெரும் திரையை அமைக்கின்றன.

வெப்பநிலையைக் குறைப்பதற்கு, திரை கடையின் முகப்பு மீது நகர்த்தப்படுகிறது.

ஷாங்ஹாயில் (Shanghai) உள்ள Apple கடை

தரையிலிருந்து வெளியாகும் உருளையான கண்ணாடியே கடையின் நுழைவாயிலாக அமைந்துள்ளது.

(படம்: REUTERS/Carlos Barria)

(படம்: REUTERS/Carlos Barria)

அதற்குக் கீழே சென்றால் மட்டுமே, கடைக்குள் நுழையலாம்.

உருளையான வடிவத்தைப் பெற, கண்ணாடி நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டது.

அந்த வடிவமைப்புக்கு Apple நிறுவனம் காப்புரிமையைக் கூட பெற்றுள்ளது.

ஜப்பானின் கியோட்டோ (Kyoto) நகரில் உள்ள கடை

ஜப்பானிய விளக்குகளை (lanterns) மையமாகக் கொண்டு, கட்டடம் வடிவமைக்கப்பட்டது.

(படம்: Apple)

(படம்: Apple)

மரத்தண்டு, காகிதம் ஆகியவை கொண்டு வடிவமைக்கப்பட்ட கட்டடத்தின் முகப்பு, நகரின் பாரம்பரிய வீடமைப்பைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள Apple Carnegie Library கடை

1903-ஆம் ஆண்டில், நகரில் கட்டப்பட்ட முதல் பொது நூலகமான The Carnegie Library கட்டடத்தில், கடை அமைக்கப்பட்டுள்ளது.

(படம்: Patrick Semansky/AP)

(படம்: Patrick Semansky/AP)

நூலகத்தின் முகப்புப் பகுதிகள் பெரும்பாலும் புதுப்பிக்கப்பட்டன.

சீர்செய்யமுடியாத நிலையில் இருந்த சில பகுதிகள், நூலகத்தின் தோற்றத்திலிருந்து விலகாமல் இருக்கும் வகையில் கடை வடிவமைக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்