Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அறுவைச் சிகிக்சை - குணமாக உதவும் இசை

அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகள், மயக்க நிலையில்கூட இசையை கேட்பது நல்லது.

வாசிப்புநேரம் -
அறுவைச் சிகிக்சை - குணமாக உதவும் இசை

இசையைக் கேட்பவர்கள். (படம்: Reuters)

அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகள், மயக்க நிலையில் இருக்கும்போது கூட இசையைக் கேட்பது நல்லது. அவ்வாறு செய்வதால் வலியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் தேவைக் குறையும் என்று The Lancelet அறிவியல் சஞ்சிகை நடத்திய அண்மை ஆய்வு ஒன்று காட்டுகிறது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வழக்கமானவர்களை விட இசையைக் கேட்பர்களுக்கு வலி 20 விழுக்காடு அதிகமாகக் குறையும். அவர்களுக்கு ஏற்படும் அச்சமும் 10 விழுக்காடு குறையும். நோயாளியின் மன திருப்தியும் இசையால் அதிகரிக்கும் . இம்முடிவுகள் பொதுவாக அனைத்து வகை இசைகளுக்கும் பொருந்தும்.

அறுவைச் சிகிக்சைக்குப் பிறகு இசையைக் கேட்பதைவிட, அதற்கு முன்பே இசையை கேட்பதால் கூடுதல் நிவாரணம் ஏற்படும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்