Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நீரிழிவு நோய்க்குள்ளாகும் அபாயம் - குறைப்பது எப்படி?

நீரிழிவு  நோயால் சிங்கப்பூரில் சுமார் 400,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பதினைந்து வருடங்களில் இந்த எண்ணிக்கை 600,000 ஆக அதிகரிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடும்  சரியான வாழ்க்கை முறையும் அவசியம். 

வாசிப்புநேரம் -
நீரிழிவு நோய்க்குள்ளாகும் அபாயம் - குறைப்பது எப்படி?

ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கணிக்கும் கருவி. (படம்: Reuters)

நீரிழிவு நோயால் சிங்கப்பூரில் சுமார் 400,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பதினைந்து வருடங்களில் இந்த எண்ணிக்கை 600,000 ஆக அதிகரிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடும் சரியான வாழ்க்கைமுறையும் அவசியம்.


மன அழுத்தப் பராமரிப்பு

மன உளைச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். குறிப்பாக, மன உளைச்சலால் தூங்க முடியாதவர்களுக்கு உடலில் glucose தயாரிப்பு குறையும். இது நீரிழிவு நோயின் அபாயத்தைப் பெருக்கும். யோகம், நல்ல இசை போன்றவற்றைக் கொண்டு மனத்தை இதமடையச் செய்வது நல்லது.

சீரான உடற்பயிற்சி

இதற்காக மணிக்கணக்கில் வியர்க்க விறுவிறுக்க ஒடியாட வேண்டும் என்பது இல்லை. அரைமணி நேரம் மெதுவோட்டத்திற்கு ஒதுக்கினால் நீரிழிவு ஏற்படும் அபாயம் 30 விழுக்காடு குறையும்.

கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்

விரைவு உணவகங்களில் உள்ள Hydrogenated கொழுப்பு, நீரிழிவையும் இதய நோயையும் ஏற்படுத்தும். எனவே அதனை முடிந்தவரை தவிர்ப்பது மிக நல்லது.

35 வயதிற்கு பிறகு வருடந்தோறும் ரத்த சர்க்கரை அளவைச் சோதித்தல்

ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சோதித்துக் கொண்டால் எந்தளவிற்கு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும், எந்தளவிற்கு உணவுக் கட்டுப்பாடு தேவை போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படும். இதனால் உணவுப் பழக்கத்திலும் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் ஒருவருக்கு விழிப்புணர்வு உண்டாகும். இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்