Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் வெகுமதி - மெக்சிகோவில்

உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். இதை வலியுறுத்தி வரும் பல நாடுகள் அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க பல்வேறு வழிகளைக் கையாள்கின்றன. உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வெகுமதிகளை வழங்குகிறது மெக்சிகோ.

வாசிப்புநேரம் -

உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். இதை வலியுறுத்தி வரும் பல நாடுகள் அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க பல்வேறு வழிகளைக் கையாள்கின்றன. உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வெகுமதிகளை வழங்குகிறது மெக்சிகோ.

குந்தி அமர்வது பலருக்குச் சிரமமாக இருக்கலாம். உடற்பருமனைக் குறைக்க அது சிறந்த வழி என்பதால் மெக்சிகோ மக்கள் அதைச் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். அதுவும் பலர் கூடும் பொது இடத்தில்.மெக்சிகோ சிட்டி முழுதும் 21 பேருந்து முனையங்களில் புதிய இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதன்முன் போய் குந்தி அமரும் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

{ மெக்சிகோவில் ஒரு குடும்பம். படம் :AFP}

பத்து முறை சரியாகச் செய்துவிட்டால் பரிசு உண்டு. பேருந்தில் செல்வதற்கான இலவச நுழைவுச் சீட்டு அது. இயந்திரம் அதை அச்சடித்துக் கொடுக்கும். நுழைவுச்சீட்டை உடனே எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு முறையும் பத்து முறை பயிற்சியைச் சரியாகச் செய்து சேர்த்துக்கொண்டே போகலாம். அது வெவ்வேறு நாட்களிலும் இருக்கலாம்.

நுழைவுச் சீட்டுகள் சேரச் சேர அதற்கேற்ப மேம்பட்ட வெகுமதிகள் கிடைக்கும்.இம்மாதம் 15ஆம் தேதிதான் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்குள் சுமார் 74,000 பேர் இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

உட்கார்ந்தே நேரத்தைப் போக்கி உடற்பருமனை ஏற்றிக் கொண்டே போகும் பலருக்கு இது நல்ல வாய்ப்பு என்று மெக்சிகோ மக்கள் கருதுகின்றனர். மெக்சிகோவில் பெரியவர்களில் 70 விழுக்காட்டினர் அளவுக்கு அதிகமான உடல் எடையைக் கொண்டுள்ளனர். உடற்பருமன் பிரச்சினையைக் கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாம் நிலையில் உள்ளது மெக்சிகோ. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்