Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உணவு மனநலத்தை பாதிக்குமா?

சத்துள்ள உணவு, உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும்  நல்லது என்று நிரூபிக்கும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. Food psychiatry எனப்படும் உணவு சார்ந்த மனநல மருத்துவம்  என்ற புதியத் துறை வளர்ச்சி காணலாம்.

வாசிப்புநேரம் -
உணவு மனநலத்தை பாதிக்குமா?

மனித மூளை. (படம்: Reuters)

சத்துள்ள உணவு, உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் நல்லது என்று நிரூபிக்கும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. அதனால் Food psychiatry எனப்படும் உணவு சார்ந்த புதிய மனநல மருத்துவத் துறை வளர்ச்சி காணலாம்.

நோயாளிகளின் உணவு பழக்க வழக்கங்களைப் பற்றி விசாரிப்பதற்கு பொதுவாக மனநல மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதில்லை என்றார் கொலம்பியா பல்கலைக்கழக மனநல மருத்துவ பேராசிரியர் ட்ரூ ரேம்சி (Drew Ramsey). மக்களின் உணவு பழக்க வழக்கங்களைச் சீர்செய்து அவர்களுக்கு மனநோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.

சத்துள்ள உணவு வகைகள் மூளைத் தசைகளை வலுப்படுத்துகின்றன. ஊட்டச்சத்தை அதிகரிக்கின்றன. நரம்பு மண்டலத்தைச் சீராக இயங்கச் செய்கின்றன. Omega-3, zinc, வைட்டமின் B ஆகியவை மூளைக்கு உரம் அளிப்பவை. மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் சக்தியைத் தரக்கூடியவை. ஆனால், கொழுப்பும் சர்க்கரையும் அதிகமுள்ள பண்டங்கள் மூளைக்குக் கெடுதலை ஏற்படுத்தலாம் என்கின்றன ஆய்வுகள்.

ஆயினும், மனநல மருந்துகளுக்கு மாறாக உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகிறவர்கள், அதுகுறித்து தங்களது மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்