Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மலேரியா நோயைத் தடுக்கும் கொசுக்கள்

மலேரியா நோய் தொற்று எதிர்கும் தன்மைக் கொண்ட கொசுகளை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
மலேரியா நோயைத் தடுக்கும் கொசுக்கள்

படம்; REUTERS

மலேரியா நோய் எதிர்ப்புத் தன்மைக் கொண்ட கொசுக்களை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெளியிலும் வெற்றியடைந்தால், மனிதர்களிடையே மலேரியா நோய் பரவலைக் குறைக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Crispr என்ற முறை மூலம், கொசுகளின் மரபணுவில் புதிய எதிர்ப்புத் தன்மையை அவர்கள் சேர்த்துள்ளனர். அந்த கொசுகள் இனப்பெருக்கம் செய்யும்போது அந்த நோய் எதிர்ப்புத் தன்மை பரப்பப்படுகிறது.   அதனால், அந்த கொசுகள் மனிதர்களைக் கடித்தால், மலேரியா நோய் பரவாது என நம்பப்படுகிறது.

உலகில் சுமார் 3.2 பில்லியன் மக்கள் மலேரியா நோய் தொற்றும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். கொசு வலைகள், கொச மருந்து ஆகியவை கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள நமக்கு உதவுகிறது. மருந்தின் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும். இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 580,000 பேர் அந்நோய்க்கு பலியாகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்