Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வலி தீர்க்கும் உணவுகள்

இன்றைய பரப்பான சூழலில் உடல்ரீதியாக நாம் பல வலிகளை அனுபவிக்கிறோம். அந்த வலிகளுக்கு தீர்வு காண பல மாத்திரைகளை உட்கொள்கிறோம்.

வாசிப்புநேரம் -
வலி தீர்க்கும் உணவுகள்

செர்ரி

இன்றைய பரபரப்பான சூழலில் உடல்ரீதியாக நாம் பல வலிகளை அனுபவிக்கிறோம். அந்த வலிகளுக்கு தீர்வு காண பல மாத்திரைகளை உட்கொள்கிறோம்.

ஆனால், அது நிரந்தர தீர்வு என்று சொல்ல முடியாது, மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், மருந்தாகும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

வலிகளை போக்கும் உணவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

செர்ரி

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் சிலர் தசைப்பிடிப்பு வலியால் அவதிப்படலாம், அவர்கள் ஒரு டம்ளர் செர்ரி பழச்சாறு  குடித்தால் வலியில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணியாக பயன்படும் பூண்டினை தட்டி, ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலிகள் குணமாகும்.

திராட்சை

திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகு வலியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகு வலியை குறைக்கும்.

கிராம்பு

பல் வலிகளுக்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகும், மேலும் கிராம்பை பல் வலியின் போது வாயில் போட்டு கடித்துக்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்