Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

AIDS நோயால் மடியும் இளையர்கள் 2 மடங்கு அதிகரிப்பு

AIDS நோயால் மரணமடையும் பதின்ம வயதினரின் எண்ணிக்கைக் கடந்த 15 ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.  ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் குழந்தைகள் உரிமை, அவசர நிவாரண அமைப்பு 

வாசிப்புநேரம் -
AIDS நோயால் மடியும் இளையர்கள் 2 மடங்கு அதிகரிப்பு

AIDS கிருமி.

AIDS நோயால் மரணமடையும் பதின்ம வயதினரின் எண்ணிக்கைக் கடந்த 15 ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் குழந்தைகள் உரிமை, அவசர நிவாரண அமைப்பு அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

பதின்ம வயதினரில் பெரும்பாலோர் கைகுழந்தையாக இருக்கும்போதே அந்த நோயால் பாதிகப்பட்டதாகத் தெரியவந்தது. ஆப்பிரிக்காவில் பத்திலிருந்து 19 வயது இடைப்பட்டவர்களில் மாண்டோரில் பெரும்பாலோர் AIDS-இற்குப் பலியானதாய் கூறப்பட்டது.

AIDS நோயின் நிலை அறியாமலேயே பலர் பதின்ம வயதை எட்டியிருக்கின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட, 2.6 மில்லியன் சிறுவர்களில், மூவரில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருவதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டின. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்